07/19/22

கணியமூரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எஸ் செல்வகுமார் ஆகியோரை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜாதவத், புதிய எஸ்பியாக சென்னை,திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் எஸ்.பகலவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தின் திட்ட இயக்குனராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் செல்வகுமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிறித்துவ உதவும் சங்கம் மற்றும் முஸ்லீம் உதவும் சங்கம் மற்றும் துறை சார்பில் 183 பயனாளிகளுக்கு ₹20 லட்சத்தி 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்மனோ தங்கராஜ் அவர்களும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும் இணைந்து வழங்கினார்கள்.

உடன் : மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள். கலந்து கொண்டனர்
















நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 சிறுபான்மையினரின் பாதுகாப்பை வலியுறுத்தி

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்


காயல்பட்டினதில் நேற்று திங்கள் (18.7.22)  இரவு 7 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.காயல்பட்டின நகர தலைவர் ஹாஜி NS.நூஹ் சாகிப் தலைமையிலும்,காயல் மகபூப்( கொள்கை பரப்புச் செயலாளர்) P. மீராசா மறைக்காயர்(மாவட்ட தலைவர்),SA.இப்ராஹிம் மக்கி (மாநிலத் துணைச் செயலாளர்) SI.முஹ்முது ஹசன்( மாவட்ட செயலாளர்) K.மீராசா (மாவட்ட பொருளாளர்),மன்னர் AR. பாதுல் அஸ்ஹாப்( மாவட்டத் துணைத் தலைவர்) AR.தாஹா ( மாவட்டத் துணைத் தலைவர்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.


மிக சிறப்பான உரையை "மத நல்லினக்க நாயகர்" S.பீட்டர் அல்போன்ஸ் முன்னாள் எம்பி(தலைவர் சிறுபான்மையினர் நல வாரியம்),

 

KAM.முகமது அபூபக்கர் Ex.எம்.எல்.ஏ.,(மாநில பொதுச்செயலாளார்),செய்யத் முனவ்வர் அலி சிஹாப் தங்ஙள் (கேரள மாநில யூத்லீக் தலைவர்),P.V.அகமது சாஜூ (தேசிய துணைதலைவர்MSF) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.நவ்ரங் சஹாபுதீன் (மவட்ட துணைத் தலைவர்) J.இப்ராஹிம் (மாவட்டதுணைத் தலைவர்),சுலைமான் அரபி மற்றும் காயல் பட்டிணம் பிரைமரி கிளை நிர்வாகிகள்,தூத்துக்குடி நகர கிளைகளான ரஹ்மத்நகர்,ஜாகீர் உசேன்நகர்,ஸ்டேட் பேங்க் காலனி மஹல்லாவாசிகள் மற்றும்  அண்ணா நகர், செல்வநாயகபுரம், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு காலனி, ரஹ்மத்துல்லாபுரம்,  திரேஸ்புரம்,ஜெய்லானிதெரு, தெற்கு புது தெரு,    போன்ற தூத்துக்குடி அனைத்து மஹல்லா  பிரைமரி கிளை நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் மிகச் எழுச்சியுடன் கலந்து  சிறப்பித்தனர்.கண்டன பொதுக்கூட்டம் காயல்பட்டினம் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்களால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.





நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி