Articles by "சினிமா"
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொன்னியின் செல்வன்

உண்மையை உடைத்த

பார்த்திபன்





பொன்னியின் செல்வன் திரைப்படம்  கல்கியின் பொன்னியின் செல்வனா - திருச்சியில் உண்மையை உடைத்த நடிகர் பார்த்திபன்

திருச்சியில் மூர்த்திஸ் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.இது திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி என்ற பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காரில் அமர்ந்து கொண்டு திரைப்படங்களை காண முடியும். இதற்காக 80*50 சதுர அடியில் மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இது போன்ற திறந்தவெளி திரையரங்கு உள்ளது.

இதில் குறிப்பாக தற்பொழுது புதிதாக திருச்சி மாவட்டத்தில்  திறக்கப்பட்டுள்ளது.மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் 100 கார்களை நிறுத்தலாம்.மேலும் கூடுதலாக 100 இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் திரைப்படத்தை காண முடியும்.

குறிப்பாக நாள் ஒன்றுக்கு இரவு 6 மணி முதல் 9 மணி வரை ஒரு காட்சியும், 10 மணி முதல் 12 மணி வரை மற்றொரு காட்சி என இரண்டு காட்சிகள் திரையிடப்படுகிறது.இந்த புதிய திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன்..தமிழ் திரைப்படம் என்றாலே பொன்னியின் செல்வன் தமிழ் திரையரங்கில் பாராட்டப் படக்கூடிய திரைப்படமாக இது உள்ளது.பெண்கள்  பெரிய புத்திசாலிகள் என பேசினார்.

பின்னர் அங்குள்ள பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் பார்த்திபனின் கனவு என்ன? உலகத்தில் முதல் படம் தயாரிக்கும் அளவிற்கு என்னுடைய கனவுகள் விரிந்து கொண்டு இருக்கிறது. நான் அடுத்ததாக ஜாலியாக, கமர்சியலாக ஒரு திரைப்படம் எடுக்க உள்ளேன் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கும் பொழுது நானும் ஒரு நாள் திரைப்படத்தில் நடிப்பேன் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன்.

தற்பொழுது வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்தினத் தினுடைய பொன்னின் செல்வனாக தான் உள்ளது. கல்கியினுடைய பொன்னியின் செல்வனாக இருக்க வாய்ப்பில்லை.

இயக்குனர் எதை சொல்லிக் கொடுக்கிறாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.காதல் அதிகமாக இருப்பதினால் தான் நான் இளமையாக இருக்கிறேன். மேலும் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் நடிகர் பார்த்திபனை பார்த்து ஐ லவ் யூ என்று கூற அவர் கூறியதில் சந்தோஷமும் வருத்தமும் இருக்கிறது ஒரு ஆண் கூறியதால் வருத்தம் இருக்கிறது என்றார்.ஆனால் யாராவது கூறுகிறார்களே என்கின்ற சந்தோசம் இருக்கிறது என தெரிவித்தார்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் பேசிய தமிழ் போன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பேசுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குனர் விருப்பத்திற்கு  ஏற்ப சுத்த தமிழிலில் அல்ல கலோகியலாக பேசி உள்ளேன்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படக் கதையை இயக்குனர் செல்வராகவன் கூறுகையில் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் பொன்னியின் செல்வனுக்கு ஒரு ஆதாரம் உள்ளது. எழுத்தாளர் கல்கி எழுதியிருக்கிறார் புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அப்படி இல்லை அது ஒரு காட்டாறு, இயக்குனர் செல்வராகவனுடைய படைப்பு.

ராஜராஜ சோழன்  கதாபாத்திரத்தில் நடித்தவர் என்றாலே நடிகர் திலகம் கணேசன் தான் அவரைப் போன்று நடிக்க முயற்சி செய்வது மிகப்பெரிய தவறு. அரசர்  கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் நடிக்க கூடாது என்று முடிவு செய்தேன். முயற்சி செய்தால் வராது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

12 வருடங்களுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் பெயரை கூறும் போது ரசிகனுடைய கட்டுக்கடங்காத உற்சாகம். 12 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்திற்கு பாராட்ட பெறுவது மகிழ்ச்சியான விஷயம். உழைப்பு என்றும் வீண் போகாது அதுபோலத்தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமாக உள்ளது 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உடைய வசூல் தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் இதற்காக ஆயிரத்தில் ஒருவனை போல் நன்றி சொல்ல காலம் தாழ்த்தக்கூடாது என தெரிவித்தார்.

இங்கு திரைப்படத்தை காண வருபவர்கள் ஒருவருக்கு 200 ரூபாய் (சிறியவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் )கார் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது மேலும் இருசக்கர வாகனத்தில் வருவார்கள் 50 ரூபாய் இரு சக்கர வாகனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும் .

100 பேர் இருக்கையில் அமர்ந்தும் படம் பார்க்க முடியும். தேவையான உணவுகள், தின்பண்டங்கள் ஆன்லைன் மூலமாகவும் அங்கு உள்ள உணவகத்திலும் ஆர்டர் செய்தால் காருக்கு கொண்டு வந்து தரும் வசதியும் ஏற்படுத்தி உள்ளதாக மூர்த்தீஸ் திரையரங்கு உரிமையாளர் மருத்துவர் ஹரிஷ் குறிப்பிட்டார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

வயலூர் முருகன் கோயிலில்

எளிமையாக நடைபெற்ற நடிகர்

விக்னேஷ் காந்த் திருமணம்





பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த் இவர் சென்னை 28, நட்பே துணை ன, மீசைய முறுக்கு, மெகந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில பாடல்களையும் எழுதி உள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

விக்னேஷ் காந்க்கும், இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜாத்திக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் விக்னேஷ் காந்த் ராஜாத்தி திருமணம் நேற்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

திருமண புகைப்படத்தை வலைதளங்களில் விக்னேஷ் காந்த் வெளியிட்டுள்ளார்.அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சியில் நாளை (03.09.22)

ரம்யா பாண்டியன் யாஷிகா ஆனந்த்

வாணி போஜன் பங்கேற்கும்

நடனத் திருவிழா



தென்னிந்தியாவின் மாபெரும் நடனத் திருவிழா!!! "Dream O Fest 2022!!"

நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மஹோத்சவம்!

உங்கள் பேராதரவுடன் 12 - ஆயிரம் பார்வையாளர்களுடன் மொரைராஸ் சிட்டியில் நாளை (03.09.2022) மாலை 6மணிக்கு  நடனப் போட்டிகளுடன் தொடங்குகிறது.

ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த திரைப்பட நாயகிகள் ரம்யா பாண்டியன், வாணி போஜன், யாஷிகா ஆனந்த் மேலும் இவர்களுடன் விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து அசத்தும்  "Star Night Show"  நடைபெற உள்ளது.

டிக்கெட் தொடர்பு எண்கள்..95971 16464

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி


இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பட குழுவினர் திருச்சி வந்தனர். திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் இத்திரைப்படம் தொடர்பாக அவர்கள் மாணவர்களை சந்தித்தனர். கல்லூரிக்கு வந்த நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

 எனக்கு பைத்தியம்

திருச்சியில்

நடிகர் விக்ரம் பேச்சு







இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பட குழுவினர் திருச்சி வந்தனர். திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் இத்திரைப்படம் தொடர்பாக அவர்கள் மாணவர்களை சந்தித்தனர். கல்லூரிக்கு வந்த நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விக்ரம்.... இந்த படத்தின் பெரிய பலம் இயக்குனர் அஜய் தான். அவர் எடுத்த படங்களில் இது வித்தியாசமானதாக இருக்கும். அவர் ஏற்கனவே எடுத்த இரு படங்களை விட கோப்ரா திரைப்படம் "அதுக்கும் மேல இருக்கும்" என அவர் பாணியில் கூறினார். கோப்ரா படம் விஞ்ஞானம், திரில்லர், குடும்ப கதை உள்ளிட்ட பலவற்றின் கலவையாக இருக்கும். இந்த படத்தின் நாயகி ஸ்ரீநிதி அந்நியன் பார்த்து விட்டு என்னுடன் நடிக்க வேண்டும் என சிறு வயதில் ஆசைப்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார்.

தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த விக்ரம்.....சினிமா என்றாலே எனக்கு பைத்தியம். எனவே தான் இதில் கடுமையாக உழைக்கிறேன். ரசிகர்கள் எங்களை சூழ்ந்து போட்டோ, ஆட்டோகிராஃப் வாங்க வருவது எங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கிடையாது. இன்னும் சொல்ல போனால் இதற்காக தான் ஏங்குகிறோம்.  இது கடவுள் கொடுத்த வரம். நான் நடித்த எல்லாப்படமும் எனக்கு பிடிக்கும். ஆனால் இப்பொழுது என் மண்டைக்குள் கோப்ரா மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறது.

நாங்கள் பல தோல்விகளை சந்தித்து விட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆனால் இந்த தலைமுறை தோல்வியை ஏற்க முடியாததாக மாறிவிட்டது. நாம் கல்வி உள்ளிட்ட எதையும் பிரஷராக எடுத்து கொள்ள கூடாது. விழுந்தால் கூட எழுந்து ஓட வேண்டும். சேதுவிற்கு பிறகு நம்ப முடியாத அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. அடுத்து இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து  படம் நடிக்க உள்ளோம். அது முடிந்த பின்பு மீண்டும் அஜய் இயக்கத்தில் மற்றொரு படம் நடிக்க உள்ளேன்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் நாம் பெருமைப்படும் வகையில் இருக்கும். அந்த படத்தில் நானும் இருப்பது எனக்கு பெரிய பெருமை என்றார். மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடிகர் விக்ரம் கோப்ரா படத்திலிருந்து பாடல் ஒன்றையும், அந்நியன் பட வசனத்தையும் பேசி அசத்தினார்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு  நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள வாரியர் திரைப்படத்தின் வெளியிட்டுக்கான  முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷால், ஆர்யா, இயக்குனர்கள்  பாரதிராஜா மணிரத்னம், ஷங்கர்கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட 20 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்அதில் அனைவரும் லிங்குசாமியையும் வாரியர் திரைப்படத்தையும் பாராட்டி பேசினர்.

தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள வாரியர் விழாவில் பேசிய விஷால் தற்போது தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழில் வெளியாகின்றன. தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடிக்கின்றனர். இதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.தென்னிந்திய சினிமா தென்னிந்திய சினிமா என்று சும்மாவா சொல்வார்கள். இன்று தென்னிந்திய சினிமாதான் ரூல் செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார். அத்துடன் பாலிவுட் தற்போது கதிகலங்கி உள்ளது எனவும் கூறினார். தெலுங்கு ரசிகர்கள் ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் போன்ற தமிழ் நடிகர்களை வரவேற்றுள்ளனர். அதுபோல  ராம் போத்தினேனியை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என விஷால் கூறினார்.



 

நடிகர் சூர்யா

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். அவருடன் இந்தி நடிகை கஜோலுக்கும் அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சார்பில் இயக்குநர் பிரிவில் பான் நலின் என்பவருக்கும் ஆவணப் படங்கள் பிரிவில், சுஷ்மித் கோஷ் மற்றும் ரின்டு தாமஸ் ஆகிய இருவருக்கும், எழுத்தாளர்கள் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்டதை தொடர்ந்து "பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா" (இந்திய சினிமாவின் பெருமிதம்) என்ற வார்த்தைகளுடன் சூர்யாவை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்துவருகின்றனர். சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.