யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைவர் பீமநகர் S.ரபீக்
கண்டன அறிக்கை
ஜனநாயக சமூக சேவை அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) கொரோனா போன்ற பல பேரிடர் காலங்களில் தன்னலமற்ற அர்ப்பணிப்பு சேவை பணியை செய்து வந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான அத்துமீறிய சோதனை நடவடிக்கை களுக்கும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கைதுக்கும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) கடும் கண்டனம்..
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், செய்திகளை வெளியிட்டு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜனநாயக ரீதியாக செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்க நினைக்கும் தேசிய புலனாய்வு (NIA) நிறுவனத்திற்கும் மத்திய பாசிச பாஜக அரசுக்கும் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது இன்று கைது செய்யப்பட்டுள்ள PFI மாநில, தேசிய நிர்வாகிகளையும், தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இது போன்று தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் சட்டவிரோத மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழக முஸ்லிம்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.