அ.இ.அ.தி.மு.கழகம்
18.10.2022 தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்து
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மின் நிறுத்தம்
உளுந்தூர்பேட்டை, எறையூர் துணை மின் நிலையங்கள்
எதிர்வரும் 15.10.2022 சனிக்கிழமை அன்று 110/33-11 கி.வோ உளுந்தூர்பேட்டை மற்றும் 33/11 கி.வோ. எறையூர் துணை மின் நிலையங்களில் காலை 9.00 மணி முதல் மதியம் 17.00 மணி வரை மேம்பாட்டு (ம) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.
1.உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட “உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம் வண்டிப்பாயைம் சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார்கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், கிள்ளனூர், குரும்பூர், வண்டிபாளையம், மற்றும் நகர்"
2.எறையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட "புகைப்பட்டி, அ.குஞ்சரம், பி.குஞ்சரம் கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வடகுறும்பூர், எல்லைகிராமம், கூவாடு,தேன்குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு" .
3 சேந்தநாடு துணை மின் நிலையத்திற்கு செல்லக்கூடிய உயர் மின்னழுத்த பாதையில் இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு காலை 09.30 மணி முதல் 11 30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்விநியோகம் இருக்காது
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
கூட்டடிகள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியாம்பாயைம் தொப்பையாங்குளம், மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர் திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிபாளையம், மைலங்குப்பம், சேந்தமங்கலம் மற்றும் சேந்தநாடு.
தீபாவளி பண்டு மோசடி
தீபாவளி பண்டு மோசடி 100க்கும் மேற்பட்டோர் கோட்டை காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு.
ஈகிள் சதீஷ் பண்டு என்ற நிறுவனம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆண்டாள் வீதியில் செயல்பட்டு வருகிறது..
இந்த நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்டோர் ரூ.50 முதல் 500 ரூபாய் வரை தீபாவளி பண்டு கட்டியுள்ளனர்.
தற்பொழுது அந்த பணத்தை அந்த நிறுவனம் தர மறுத்துள்ளதால் நூற்றிற்கும் மேற்பட்டோர் கோட்டை காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலின்
கஜேந்திர சிங் ஷெகாவத்
சந்திப்பு
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
குட்டி காவலர்
மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி
மு.க ஸ்டாலின்
கே.எம்.காதர் மொய்தீன்
சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ன் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்ததனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்.Ex.MLA.,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் கே.நவாஸ் கனி.M.P.,உள்ளிட்டோர் சந்தித்தனர்.
பொன்னியின் செல்வன்
உண்மையை உடைத்த
பார்த்திபன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் பொன்னியின் செல்வனா - திருச்சியில் உண்மையை உடைத்த நடிகர் பார்த்திபன்
திருச்சியில் மூர்த்திஸ் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.இது திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி என்ற பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காரில் அமர்ந்து கொண்டு திரைப்படங்களை காண முடியும். இதற்காக 80*50 சதுர அடியில் மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இது போன்ற திறந்தவெளி திரையரங்கு உள்ளது.
இதில் குறிப்பாக தற்பொழுது புதிதாக திருச்சி மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் 100 கார்களை நிறுத்தலாம்.மேலும் கூடுதலாக 100 இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் திரைப்படத்தை காண முடியும்.
குறிப்பாக நாள் ஒன்றுக்கு இரவு 6 மணி முதல் 9 மணி வரை ஒரு காட்சியும், 10 மணி முதல் 12 மணி வரை மற்றொரு காட்சி என இரண்டு காட்சிகள் திரையிடப்படுகிறது.இந்த புதிய திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன்..தமிழ் திரைப்படம் என்றாலே பொன்னியின் செல்வன் தமிழ் திரையரங்கில் பாராட்டப் படக்கூடிய திரைப்படமாக இது உள்ளது.பெண்கள் பெரிய புத்திசாலிகள் என பேசினார்.
பின்னர் அங்குள்ள பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் பார்த்திபனின் கனவு என்ன? உலகத்தில் முதல் படம் தயாரிக்கும் அளவிற்கு என்னுடைய கனவுகள் விரிந்து கொண்டு இருக்கிறது. நான் அடுத்ததாக ஜாலியாக, கமர்சியலாக ஒரு திரைப்படம் எடுக்க உள்ளேன் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கும் பொழுது நானும் ஒரு நாள் திரைப்படத்தில் நடிப்பேன் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன்.
தற்பொழுது வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்தினத் தினுடைய பொன்னின் செல்வனாக தான் உள்ளது. கல்கியினுடைய பொன்னியின் செல்வனாக இருக்க வாய்ப்பில்லை.
இயக்குனர் எதை சொல்லிக் கொடுக்கிறாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.காதல் அதிகமாக இருப்பதினால் தான் நான் இளமையாக இருக்கிறேன். மேலும் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் நடிகர் பார்த்திபனை பார்த்து ஐ லவ் யூ என்று கூற அவர் கூறியதில் சந்தோஷமும் வருத்தமும் இருக்கிறது ஒரு ஆண் கூறியதால் வருத்தம் இருக்கிறது என்றார்.ஆனால் யாராவது கூறுகிறார்களே என்கின்ற சந்தோசம் இருக்கிறது என தெரிவித்தார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் பேசிய தமிழ் போன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பேசுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குனர் விருப்பத்திற்கு ஏற்ப சுத்த தமிழிலில் அல்ல கலோகியலாக பேசி உள்ளேன்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படக் கதையை இயக்குனர் செல்வராகவன் கூறுகையில் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் பொன்னியின் செல்வனுக்கு ஒரு ஆதாரம் உள்ளது. எழுத்தாளர் கல்கி எழுதியிருக்கிறார் புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அப்படி இல்லை அது ஒரு காட்டாறு, இயக்குனர் செல்வராகவனுடைய படைப்பு.
ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்றாலே நடிகர் திலகம் கணேசன் தான் அவரைப் போன்று நடிக்க முயற்சி செய்வது மிகப்பெரிய தவறு. அரசர் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் நடிக்க கூடாது என்று முடிவு செய்தேன். முயற்சி செய்தால் வராது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
12 வருடங்களுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் பெயரை கூறும் போது ரசிகனுடைய கட்டுக்கடங்காத உற்சாகம். 12 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்திற்கு பாராட்ட பெறுவது மகிழ்ச்சியான விஷயம். உழைப்பு என்றும் வீண் போகாது அதுபோலத்தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமாக உள்ளது
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உடைய வசூல் தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் இதற்காக ஆயிரத்தில் ஒருவனை போல் நன்றி சொல்ல காலம் தாழ்த்தக்கூடாது என தெரிவித்தார்.
இங்கு திரைப்படத்தை காண வருபவர்கள் ஒருவருக்கு 200 ரூபாய் (சிறியவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் )கார் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது மேலும் இருசக்கர வாகனத்தில் வருவார்கள் 50 ரூபாய் இரு சக்கர வாகனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும் .
100 பேர் இருக்கையில் அமர்ந்தும் படம் பார்க்க முடியும். தேவையான உணவுகள், தின்பண்டங்கள் ஆன்லைன் மூலமாகவும் அங்கு உள்ள உணவகத்திலும் ஆர்டர் செய்தால் காருக்கு கொண்டு வந்து தரும் வசதியும் ஏற்படுத்தி உள்ளதாக மூர்த்தீஸ் திரையரங்கு உரிமையாளர் மருத்துவர் ஹரிஷ் குறிப்பிட்டார்.
பள்ளிக்கு நவீன பாதுகாப்பு வசதி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் CSR திட்டத்தின் கீழ் ரூ.2.58 கோடி மதிப்பில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
உயர்நிலை ஆலோசனை குழு
மாநில உறுப்பினர் பதவி
உயர்நிலை ஆலோசனை குழு மாநில உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விருப்ப முள்ளவர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநில உறுப்பினர் பதவியில் சேர்வதற்கு 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் முதியோர் நல மேம்பாட்டுகளில் குறைந்த பட்சம் 3 வருட அனுபவமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் மாநில அளவில் முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவில் உள்ள அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று வருடம் கடந்த நிலையில் சென்னை மாவட்டத்தை சார்ந்த விருப்பமுள்ளவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநில உறுப்பினர் பதவியில் சேர்வதற்கு 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முதியோர் நல மேம்பாட்டுகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், சென்னை 600001 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது chndswo4568@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 21.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாளை (13.10.2022)
மின் நிறுத்தம்
செய்யப்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டத்தில் நாளை (13.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டம் லால்குடி கோட்டம் நத்தம் வாட்டர் ஒர்க்ஸ் உயர் அழுத்த மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நத்தம் வடுகர் பேட்டை பழனியாண்டி நகர் மற்றும் வாட்டர் ஒர்க்ஸ் பகுதிகளில் நாளை (13.10.2022) காலை 10 மணி முதல் மதியம் மூன்று மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தோல் நோய் மற்றும் தலைமுடி
இலவச பரிசோதனை முகாம்
என் லைப் தோல் கிளினிக் & Nax லைப் சயின்ஸ் இணைந்து நடத்தும் இலவச தோல் நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் தலைமுடி பரிசோதனை முகாம்..
மருத்துவர் : V. நவீன் பாபு
நாள்: அக்டோபர் 13 முதல் 19 வரை (7 நாட்கள் மட்டும்)
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: Nax Enclave, தில்லைநகர், திருச்சி.
முன்பதிவு அவசியம் :
9047466613 / 0431 7967922/ 8940166613 / 8940266613
சுங்கச்சாவடி
ஊழியர்கள் போராட்டம்
பாரதிய ஜனதா ஆதரவு
செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து தொடர்ந்து 11-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அசுவத்தமன், தமிழ் இலக்கிய மாவட்ட தலைவர் சவுந்தரராஜன்,கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன்,
தரவு மேலாண்மை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பிற மொழி பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் மல்லராம் ஒன்றிய தலைவர் மேற்கு வெங்கடேசன்,ஒன்றிய துணைத் தலைவர் (மேற்கு) ரமேஷ் ஆகியோர் சுங்கச்சாவடி தொழிலாளரின் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் மற்றும் 56 பணியாளர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்வதற்கும் உறுதி அளித்தனர்.
சுங்கச்சாவடி ஊழியர்கள்
அன்புமணி ராமதாஸ்
நேரில் சந்திப்பு
10-வது நாளாக தொடர்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் M.P.,ஐ செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் நேரில் சந்தித்து 28 பணியாளர்கள் பணி நீக்கத்தை தெரிவித்தனர்.
அத்துடன் அவரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அறிக்கை அளித்து இருப்பதாகவும் அதனை நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம் எனவும் வாக்குறுதி அளித்தார்.
அன்புமணி ராமதாஸ்
பிறந்தநாள்
மரக்கன்று நடப்பட்டது
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP-ன் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக தலைவர் செ.தமிழ்வாணன் தலைமையில் மரக்கன்று நடப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி நோட்டு பேனா வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் D.அண்ணாமலை,இரா.அறிவழகன்,R.பாலாஜி,K.மணிராஜ்,R.செல்வகுமார்,P.ஆனந் மற்றும் பாட்டாளி இளைஞர்கள் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நமது நிருபர் - R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி
மயிலாடுதுறையில்
மனித சங்கிலி
மயிலாடுதுறையில் விடுதலை சிறுதை,ஐ யூ எம் எல் .மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகள் இயக்கங்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிருபர் - A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை
மாணவர்களுக்கான இதழ்
ஊஞ்சல்-தேன்சிட்டு
மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’ என்கிற இதழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.