Articles by "ரெசிபி"
ரெசிபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆரோக்கியமான உணவு குறித்த

விழிப்புணர்வு

அடுப்பில்லா சமையல் போட்டி


உணவே மருந்து என்ற வாழ்வியலை கொண்ட நாம் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி வருகிறோம் இதனால் பல நோய்கள் ‌ ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளோம்.

ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் Talam shop மற்றும் அறுசுவை ஆற்றல் இணைந்து நடத்திய அடுப்பில்லா சமையல் போட்டி ‌ கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.

விதவிதமாகவோ ஒரே மாதிரியாகவோ சாப்பிடும் வழக்கத்துக்கு இடையில் வாரத்தில் ஒரு நாளாவது எளிய உணவைச் சாப்பிடலாம். இதற்காகத்தான் பண்டிகை, விசேஷ நாட்களில் குறிப்பிட்ட சில விரதம் இருக்கும் முறையைப் பலரும் கடைப்பிடித்தனர்.


சமைக்காத உணவுக்கும் நாம் அடிக்கடி இடம் தரலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் வழக்கமான உணவிலிருந்து விடுதலை பெறலாம். அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ‌ உணவு வகைகள் குறித்த சமையல் போட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‌ போட்டியானது நடைபெற்றது.


போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் ஆரோக்கியமான அடிப்பில்லா இயற்கை உணவுகளான முட்டைகோஸ் சமோசா,ஹெல்த்தி மயோனிஸ்,வேக வைக்காத இட்லி,தயிர் இல்லா தயிர் சாதம்,குக்கர் இல்லா பிரியாணி,கசகசா அல்வா போன்ற அட்டகாசமான உணவுகளுடன் இப்போட்டி நடந்தது.

இப்போடிக்கு சிறப்பு விருந்தினராக மாஸ்டர் செஃப் டைட்டில் வின்னர் தேவகி கலந்து கொண்டார்.அவர்களுடன் அறுவை ஆற்றல் நிறுவனர் ஆற்றல் சரண்யா இப்போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.போட்டியில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் பரிசு - தீக்ஷித்தா, இரண்டாம் பரிசு - சித்ரா, மூன்றாம் பரிசு - ஜனனி ஆகியோர் பெற்றனர். அறுசுவை ஆற்றல் நிறுவனர் சரண்யா போட்டி குறித்து கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்பது இன்றியமையாததாகும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்தி வருகிறோம்.தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

ஓணம் ஸ்பெஷல்

தித்திப்பான அடை பாயாசம்


தேவையான பொருட்கள்

அரிசி – 1/2 டம்ளர்

தேங்காய்ப்பால் – 4 டம்ளர்

வெல்லம் – 2 டம்ளர்

ஏலக்காய் தூள் – சுவைக்கு

பால் – 1 டம்ளர்

நெய் – தேவைக்கு

தேங்காய் துண்டுகள் – கைப்பிடியளவு

முந்திரி – தேவையான அளவு

உலர்திராட்சை – 2 ஸ்பூன்

செய்முறை: 

வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.

அடுத்து  அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.

அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.

தித்திப்பான அடை பாயாசம் தயார்

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்...

உப்பு சீடை ரெசிபி...


தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி – 300 கிராம்

பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்

வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – 2 டீஸ்பூன

ஓமம் – அரை டீஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு

வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

அரைத்த சிவப்பு மிளகாய் விழுது 

தேங்காய்த் துருவல் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவ

சீடை செய்முறை:

பச்சரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, நிழலில் காய வைக்க வேண்டும்.குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதை அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதேபோல்,பெருங்காயத்தைப் பொடித்து 50 மில்லி நீர்விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, பச்சரிசி மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து,மிளகுத்தூள் (அ) மிளகாய் விழுது,உப்பு,ஓமம்,எள்,வெண்ணெய்,பொட்டுக்கடலை மாவு,உளுத்தம் மாவு,தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும்,பெருங்காயக் கரைசலையும் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.பிறகு அந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் ஓமம் – உப்பு சீடை ரெடி...

நன்றி :- இந்த நாள் இனிய நாள்-PK.வாட்ஸ்அப் குழு