Articles by "போராட்டங்கள்"
போராட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மயிலாடுதுறையில்

மனித சங்கிலி



மயிலாடுதுறையில் விடுதலை சிறுதை,ஐ யூ எம் எல் .மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகள்  இயக்கங்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிருபர் - A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

பொதுமக்கள்

திடீர் ஆர்ப்பாட்டம்

காவல் ஆய்வாளர்

விஜயபாஸ்கர் சமரசம்


சென்னை ரெட்டேரி அருகே உள்ள விநாயகபுரத்தில் மழை நீர் தேங்குவதால் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அதில் கொசுக்கள் உருவாகி பல தொல்லைகள் கொடுப்பதாகவும் இதை சரி செய்ய கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் திடீரென விநாயகபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


















இதை அறிந்து அங்கு வந்த  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.இருப்பினும் பொதுமக்கள் யாரும் அவ்விடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சுமூகமாக பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

இதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.அங்கு வந்த காவல் உதவி ஆணையாளர் ஆய்வாளர் விஜயபாஸ்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

நமதுநிருபர் பாபுலால் குமாவத் - சென்னை

Our Correspondent - Babulal Kumawat - Chennai

சுங்கச்சாவடி

பணியாளர்கள்

பணி நீக்கம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் பணி நீக்கம் செய்ததை கண்டித்து நேற்று முதல் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்து கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்,உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன்,உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ்,

உளுந்தூர்பேட்டை சேர்மன் ராஜவேல்,திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.முருகன்,மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி,திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர்,சாந்தி இளங்கோவன்,திருநாவலூர் ஒன்றிய குழு துணை தலைவர் ராமலிங்கம் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தனர்.

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

இந்திய அரசியலமைப்பு

பாதுகாப்பு நடைப்பயணம்





பிரதமர் மோடி ஆட்சியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மதநல்லிணக்க நல்லாட்சி அமைய இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைப்பயணம் இன்று 25 9 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி 75 கி.மீ. தூரத்தை மூன்று நாட்களில் ஸ்ரீபெரும்புதூர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி நினைவிடம் சென்று இந்த நடைபயணம்  பேரணி முடிவடையும்

 நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் K S அழகிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M C சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் தணிகாசலம் 63 வது வட்ட தலைவர் S நயிப்கான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக பேரணியில்  கலந்து கொண்டனர்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

 உளுந்தூர்பேட்டையில்

நாம்தமிழர் கட்சி

ஆர்ப்பாட்டம்


உளுந்தூர்பேட்டையில் நாம்தமிழர் கட்சினர் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

NIA.வைக் கண்டித்து

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்














NIA.மற்றும் அமலாக்கத்துறை வருமானவரித் துறையை கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களை வஞ்சிக்க நினைத்து மக்கள் பணி செய்யும் அமைப்பினுடைய தேசிய  மாநில மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்த NIA.கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் 5 மணி அளவில் நடைபெற்றது 

இதில் அனைத்து கூட்டமைப்பு தலைவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மின் கட்டண உயர்வை கண்டித்து

இந்திய கம்யூனிஸ்டு

கட்சியினர் ஆர்ப்பாட்டம்



மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி மாநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‌‌ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து  மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றி தெரியும் மாடு குதிரைகளால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இடையூறுகளை தடுக்க கோரியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோருதல், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோருதல் , உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட செயலாளர் S.சிவா. AITUC மாவட்ட பொது செயலாளர் க.சுரேஷ், MC மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க. இப்ராஹீம். CPIபகுதி செயலாளர் S. பார்வதி, தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் A.அன்சர் தின் ஆகியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் R.சரசு. R .ராஜா. டேவிட் பிரபாகரன். T.இப்ராஹீம். T.சரவணன் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன் நன்றி கூறினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சியில் பார்வையற்ற

மாற்றுத்திறனாளிகள்

திடீர் மறியல் போராட்டம்





திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணுவ கேன்டீன் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் திடீரென ஈடுப்பட்டனர்.அரசு தங்களுக்கு மாதம் உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதை  5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்குவது போல் பார்வையற்ற இசைக்கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை பல நாட்களாக வைத்துள்ளோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அதே போல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்து பயணம் செய்யும்போது அவர்கள் எடுத்துச் செல்லும் பொருள்களுக்கு சுமை கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.அரசால் ஏற்கனவே பார்வையற்ற மாற்றத்திறறானளிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்து கொடுக்க வேண்டும். உள்ளிட்ட முக்கியமான எட்டு கோரிக்கை வலியுறுத்தி பல மாதங்களாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் தமிழக அரசிடமும் மனுக்கள் கொடுத்து வருகிறோம். எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென இந்த மறியல் போராட்டத்தில் இறங்கி உள்ளதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினருக்கும் பார்வையற்ற மாற்றுதிறானிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால்  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிலர் காயம் அடைந்தனர். ஆகவே இன்று காவல்துறையினர் அவர்களிடம் வாக்குவாதம் செய்தோ அவர்களை வலு கட்டாயமாகவோ கைது செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல முயற்சி  மேற்கொண்டனர்.

இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அச்சாலை வழியாக செல்லாமல் மாற்றுச்சாலை வழியாக செல்ல போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.30 நிமிடம் வரை போராடிய  நூற்றுக்கணக்கான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்  சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மஜக போராட்டம்






ஆயுள் சிறைவாசிகளை விடுதலை_செய்...

காவல் தடையை உடைத்து அதிர வைத்த தலைமைச் செயலக முற்றுகை அணிவகுப்பு....

மஜக போராட்டத்தில் பங்கேற்ற  பல்லாயிரக்கணக்கானோர் கைது...

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று செப்டம்பர் 10 தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் தடையை மீறி நடைபெற்றது.

பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு துணைத்தலைவர் S.S.பாலாஜி எம்எல்ஏ, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு,பாட்டாளி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ராம்முத்துக்குமார், சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகையை கொடி அசைத்து அற்புதம்மாள் தொடங்கி வைத்தார்.

முற்றுகையில் திரளான பெண்கள் கைக்குழந்தைகளுடன் அணி வகுத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் மதியம் 3 மணி முதல் குழுமத் தொடங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள் என நூற்றுக்கணக்காண வாகனங்களில் வந்தவர்கள் போராட்ட களத்தில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியப்படி அணிவகுத்தனர்.

போராட்டப் பகுதியை சுற்றிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் நெரிசலால் திணறியது. ஒரு கட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் திரண்டவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியாமல் போலீசார்கள் திணறினர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியோடு தடையை மீறி திரண்டு கோஷங்களை முழங்கியது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.

கூட்டம் தடுப்பை உடைத்து முன்னேற அந்த பெரிய வளாகம் முழுக்க மக்கள் எழுச்சியோடு அலைபாய்ந்தனர்.

பிறகு முற்றுகை அணிவகுப்பை அற்புதம்மாள் கொடியசைத்து தொடங்க, தலைவர்கள் முன்னிலை வகுக்க, அணி வகுப்பு நகர்ந்து.

ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வந்ததும், அனைவரும் தடுக்கப்பட்டு சிறைப் படுத்தப் பட்டனர்.

ராஜரத்னம் ஸ்டேடியம் மக்களால் நிரம்பி வழிய, அங்கு உரைகளும், முழக்கங்களும் விண்ணதிர எழுந்த வண்ணமிருந்தது.

பெண்கள் கைக்குழந்தைகளுடன் திரண்டிருந்ததும், மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் அணிவகுத்து பலராலும் பாராட்டப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக தமிழகமெங்கும் மஜகவினர் முன்னெடுத்த பரப்புரைகளும், விளம்பரங்களும் தமிழகம் எங்கும் மக்களை திரட்டி வர செய்திருக்கிறது.

பல வடிவ விளம்பர யுக்திகள் மூலம் இக்கோரிக்கையை 2 கோடிக்கும் அதிகமான மக்களிடம் மஜக வினர் கொண்டு சேர்த்துள்ளனர்.

இது இக்கோரிக்கையை மக்கள் மயப்படுத்தி யிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் போராட்டம் இது தான் என பலரும்  பாராட்டினர்.

இன்றைய முற்றுகைப் போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன்ரஷீத் வரவேற்புரை யாற்றினார்.இணை பொதுச்செயலாளரும், தலைமை போராட்ட குழுவின் தலைவருமான ஜே.எஸ்.ரிபாயி முழக்கங்களை தொடங்கி வைத்தார். துணைப்பொதுச் செயலாளர் சையத் முகமது ஃபாருக் நன்றி உரையாற்றினார்.

இதில் செ.ஹைதர் அலி, தாவுத் மியான்கான், அத்திக்குர் ரஹ்மான், ஷேக் மொய்தீன், தடா ரஹீம், தர்வேஷ் ரஷாதி, அப்பலோ ஹனீபா, R.K.ஜலீல், லத்திபுல்லாஹ், அகில பாரத சோழ ராஜ்ய கட்சி தலைவர் அம்பி வெங்கடேசன், தமிழக இளைஞர், மாணவர் இயக்க தலைவர்  MMR.மதன், திராவிடர் விடுதலை கழக சென்னை பொறுப்பாளர் தவசி, ஆகியோரும் முற்றுகை போராட்டத்தில் முன்னிலை வகுத்தனர். 

காவல் தடையை உடைத்து மஜகவினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அணிவகுத்தது பெரும் பரபரப்பை அண்ணாசாலை வரை ஏற்படுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பொது பாதையை மீட்க கோரி

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை,திருப்பரங்குன்றம் ஏற்குடி அச்சம்பத்தில் புது சாலையை ஆக்கிரமிப்பதை கண்டித்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்



ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் மாப்பிள்ளை விநாயகர்  நகர்உள்ளது.இங்குள்ள 40 அடி பொதுப் பாதையை தனியார் ஒருவர் 20 அடி அளவில  ஆக்கிரமித்து வீடுகட்டுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஏற்குடி அச்சம்பத்தில் பொதுமக்கள் புகார் செய்ததாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து இன்று மேற்கு வட்டாட்சியரிடம் நில அளவை செய்ய கோரிக்கை வைத்தது  பொதுமக்கள் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் .


ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகரில் உள்ள பொது பாதையை 40 அடி பாதையாக மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நலசங்க துணை செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நமது நிருபர்சென்னை ஷேக் அப்துல்லா