Articles by "கோரிக்கை"
கோரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மண்டை ஓடு

பூஜை நடத்திய

அகோரிகள்


திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் வாய்க்காலை ஒட்டிய பகுதியில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து நாகமங்கலத்தைச் சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் கோவிலை கட்டியுள்ளார்.

மேலும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் நள்ளிரவில் பூஜைகளை செய்து வருகின்றனர்.அகோரி மணிகண்டன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன தன் தாயின் உடலை அரியமங்கலம் இடுகாட்டில் வைத்து அதன் மீது அமர்ந்து பூஜை செய்தவர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு அகோரி மணிகண்டன் அவருடன் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அகோரிகள் மண்டை ஓடு உடன் பூஜை நடத்தினார். அப்போது அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும்,சங்குகள் ஊதியும் முழங்கினர்.

 இந்த சத்தத்தினால் கோவில் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அகோரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

NIA.வைக் கண்டித்து

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்














NIA.மற்றும் அமலாக்கத்துறை வருமானவரித் துறையை கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களை வஞ்சிக்க நினைத்து மக்கள் பணி செய்யும் அமைப்பினுடைய தேசிய  மாநில மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்த NIA.கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் 5 மணி அளவில் நடைபெற்றது 

இதில் அனைத்து கூட்டமைப்பு தலைவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி

ஆசிரியர் கூட்டணி

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


பழைய ஒய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஒய்வூதியத் தினை ரத்து செய்து பழைய ஒய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஒய்வூதியமே தொடரட்டும் என தொடங்கப்பட்டுள்ளது 

அதுபோல் தமிழகத்திலும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.ஆறாவது ஊதிய குழு அறிக்கை நிறைவேற்றப் பட்டுள்ள காலம் தொட்டு இடைநிலை ஆசிரியர் களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. 

இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.எனவே தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் இடைநிலை ஆசிரியர் களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலை சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்

தொழில் நுட்பத்தால் மேம்படாத EMIS வலைதளத்தின் மூலம் ஆசிரியர்கள் பதிவேற்றங்கள் செய்திட வேண்டும்.புள்ளி விவரங்களைத் தொகுத்து வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.இதனால் ஆசிரியர்கள் கற்றது கற்பித்தலுக்கு இடையூறு ஏற்பட்டு மாணவர்களுக்கு கல்வி நலன் பாதிக்கப் படுகிறது.எனவே இந்த EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப் படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும்.

ஒரே நாடு ஒரே கொள்கை ஏற்ற ஏழாவது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தப்பட வேண்டும்.மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும்.மத்திய அரசு அறிவித்த அகல விலை படியினை நிலுவையின்றி அறிவித்த தேதியில் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 

மதுரையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அதன் மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்புரையாக அதன் மாவட்டச் செயலாளர் கணேசன் உட்பட்டோர் ஆண்கள் பெண்கள் சுமார் 250 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

நமது நிருபர் - சென்னை ஷேக் அப்துல்லா

விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஆணையரிடம் மனு



இன்று 16.09.2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் மாடல் காலனி பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சொல்லியும்,ராமகிருஷ்ணா பள்ளி அருகில் இருக்கும் சாலையை சரி செய்ய சொல்லியும்,நகர் முழுக்க சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்கச் சொல்லியும் நகராட்சி ஆணையரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் எம்.எஸ்.முருகன்,தொகுதி துணை செயலாளர் நெலின்,சூசை நாதன்,வசந்தன்,தீந்தமிழன்,கோவிந்தன்,ஆறு,பாலாஜி சிறப்பு அழைப்பாளராக அறிவுகரசு கனக அம்பேத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

மின் கட்டண உயர்வை கண்டித்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்

கண்டன ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்காமல் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்று மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மின்வாரிய நட்டத்திற்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல, கடந்த காலத்தில் நிர்வாக தன்மையும் தனியாரிடம் கூடுதல் கட்டணத்திற்கு மின்சாரத்தை வாங்கியதுமே காரணம். மேலும் சொந்த மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமல் இந்த சுமையை பொதுமக்கள் வியாபாரிகள் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் தலையில் சுமத்தி உள்ளனர்.

இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜங்ஷன் பகுதி குழு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு CPI(M) பகுதி செயலாளர் M.I.ரபிக் அஹமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு (AlDWA) மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் S.ரேணுகா மற்றும் M.வள்ளி ஆகியோர் சிறப்பு கண்டன உரையாற்றினர்.

மேலும் ஜங்ஷன் பகுதிக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் M.விஜய் R.கணேசன் A.அப்துல் கையூம்,A.ஷேக் மொய்தீன் மற்றும் CITU அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி தோழர்.சண்முகம், CITU ஆட்டோ சங்க நிர்வாகி தோழர்.மணிகண்டன் மற்றும் கிளை செயலாளர்கள் தோழர்கள்.A.அக்பர் அலி,K.பாபு கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சியில் பார்வையற்ற

மாற்றுத்திறனாளிகள்

திடீர் மறியல் போராட்டம்





திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணுவ கேன்டீன் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் திடீரென ஈடுப்பட்டனர்.அரசு தங்களுக்கு மாதம் உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதை  5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்குவது போல் பார்வையற்ற இசைக்கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை பல நாட்களாக வைத்துள்ளோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அதே போல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்து பயணம் செய்யும்போது அவர்கள் எடுத்துச் செல்லும் பொருள்களுக்கு சுமை கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.அரசால் ஏற்கனவே பார்வையற்ற மாற்றத்திறறானளிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்து கொடுக்க வேண்டும். உள்ளிட்ட முக்கியமான எட்டு கோரிக்கை வலியுறுத்தி பல மாதங்களாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் தமிழக அரசிடமும் மனுக்கள் கொடுத்து வருகிறோம். எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென இந்த மறியல் போராட்டத்தில் இறங்கி உள்ளதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினருக்கும் பார்வையற்ற மாற்றுதிறானிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால்  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிலர் காயம் அடைந்தனர். ஆகவே இன்று காவல்துறையினர் அவர்களிடம் வாக்குவாதம் செய்தோ அவர்களை வலு கட்டாயமாகவோ கைது செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல முயற்சி  மேற்கொண்டனர்.

இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அச்சாலை வழியாக செல்லாமல் மாற்றுச்சாலை வழியாக செல்ல போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.30 நிமிடம் வரை போராடிய  நூற்றுக்கணக்கான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்  சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சென்னையில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லை



சென்னை பெரம்பூர் வெள்ளையன் மார்க்கெட் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதி அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.

நாய்கள் பல ஒன்றாக சேர்ந்து  பயமுறுத்தி வருகிறது.வருவோர் போவோர் எல்லாம் நாய்களுக்கு பயந்து பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்தி பொதுமக்கள் பீதியிலிருந்து நிம்மதியாக அவ்வழியே சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

சிறப்பு நிருபர் – R.முகமது மீரான் -  சென்னை

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மஜக போராட்டம்






ஆயுள் சிறைவாசிகளை விடுதலை_செய்...

காவல் தடையை உடைத்து அதிர வைத்த தலைமைச் செயலக முற்றுகை அணிவகுப்பு....

மஜக போராட்டத்தில் பங்கேற்ற  பல்லாயிரக்கணக்கானோர் கைது...

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று செப்டம்பர் 10 தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் தடையை மீறி நடைபெற்றது.

பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு துணைத்தலைவர் S.S.பாலாஜி எம்எல்ஏ, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு,பாட்டாளி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ராம்முத்துக்குமார், சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகையை கொடி அசைத்து அற்புதம்மாள் தொடங்கி வைத்தார்.

முற்றுகையில் திரளான பெண்கள் கைக்குழந்தைகளுடன் அணி வகுத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் மதியம் 3 மணி முதல் குழுமத் தொடங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள் என நூற்றுக்கணக்காண வாகனங்களில் வந்தவர்கள் போராட்ட களத்தில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியப்படி அணிவகுத்தனர்.

போராட்டப் பகுதியை சுற்றிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் நெரிசலால் திணறியது. ஒரு கட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் திரண்டவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியாமல் போலீசார்கள் திணறினர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியோடு தடையை மீறி திரண்டு கோஷங்களை முழங்கியது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.

கூட்டம் தடுப்பை உடைத்து முன்னேற அந்த பெரிய வளாகம் முழுக்க மக்கள் எழுச்சியோடு அலைபாய்ந்தனர்.

பிறகு முற்றுகை அணிவகுப்பை அற்புதம்மாள் கொடியசைத்து தொடங்க, தலைவர்கள் முன்னிலை வகுக்க, அணி வகுப்பு நகர்ந்து.

ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வந்ததும், அனைவரும் தடுக்கப்பட்டு சிறைப் படுத்தப் பட்டனர்.

ராஜரத்னம் ஸ்டேடியம் மக்களால் நிரம்பி வழிய, அங்கு உரைகளும், முழக்கங்களும் விண்ணதிர எழுந்த வண்ணமிருந்தது.

பெண்கள் கைக்குழந்தைகளுடன் திரண்டிருந்ததும், மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் அணிவகுத்து பலராலும் பாராட்டப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக தமிழகமெங்கும் மஜகவினர் முன்னெடுத்த பரப்புரைகளும், விளம்பரங்களும் தமிழகம் எங்கும் மக்களை திரட்டி வர செய்திருக்கிறது.

பல வடிவ விளம்பர யுக்திகள் மூலம் இக்கோரிக்கையை 2 கோடிக்கும் அதிகமான மக்களிடம் மஜக வினர் கொண்டு சேர்த்துள்ளனர்.

இது இக்கோரிக்கையை மக்கள் மயப்படுத்தி யிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் போராட்டம் இது தான் என பலரும்  பாராட்டினர்.

இன்றைய முற்றுகைப் போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன்ரஷீத் வரவேற்புரை யாற்றினார்.இணை பொதுச்செயலாளரும், தலைமை போராட்ட குழுவின் தலைவருமான ஜே.எஸ்.ரிபாயி முழக்கங்களை தொடங்கி வைத்தார். துணைப்பொதுச் செயலாளர் சையத் முகமது ஃபாருக் நன்றி உரையாற்றினார்.

இதில் செ.ஹைதர் அலி, தாவுத் மியான்கான், அத்திக்குர் ரஹ்மான், ஷேக் மொய்தீன், தடா ரஹீம், தர்வேஷ் ரஷாதி, அப்பலோ ஹனீபா, R.K.ஜலீல், லத்திபுல்லாஹ், அகில பாரத சோழ ராஜ்ய கட்சி தலைவர் அம்பி வெங்கடேசன், தமிழக இளைஞர், மாணவர் இயக்க தலைவர்  MMR.மதன், திராவிடர் விடுதலை கழக சென்னை பொறுப்பாளர் தவசி, ஆகியோரும் முற்றுகை போராட்டத்தில் முன்னிலை வகுத்தனர். 

காவல் தடையை உடைத்து மஜகவினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அணிவகுத்தது பெரும் பரபரப்பை அண்ணாசாலை வரை ஏற்படுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பேருந்து நிலையத்தில்
பொதுமக்கள் பரிதவிப்பு



வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக பேருந்துகள் ஏதுமில்லை.இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் பரிதவிப்பு.

நமதுநிருபர்- பாபுலால் - சென்னை

OUR REPORTER - BABULAL - CHENNAI



பொது பாதையை மீட்க கோரி

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை,திருப்பரங்குன்றம் ஏற்குடி அச்சம்பத்தில் புது சாலையை ஆக்கிரமிப்பதை கண்டித்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்



ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் மாப்பிள்ளை விநாயகர்  நகர்உள்ளது.இங்குள்ள 40 அடி பொதுப் பாதையை தனியார் ஒருவர் 20 அடி அளவில  ஆக்கிரமித்து வீடுகட்டுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஏற்குடி அச்சம்பத்தில் பொதுமக்கள் புகார் செய்ததாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து இன்று மேற்கு வட்டாட்சியரிடம் நில அளவை செய்ய கோரிக்கை வைத்தது  பொதுமக்கள் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் .


ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகரில் உள்ள பொது பாதையை 40 அடி பாதையாக மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நலசங்க துணை செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நமது நிருபர்சென்னை ஷேக் அப்துல்லா

வட்ட வடிவ இல்ல குடியிருப்போர்

நல சங்கத்தினர் பேட்டி


சென்னை 83 அசோக் நகர், ஜாபர்கான் பேட்டை திருநகரில் உள்ள வட்ட வடிவ இல்லம் குடியிருப்போர் நல சங்கத்தினர் பேட்டிடியில் அளித்துள்ள விவரம்

திருநகர் வட்ட வடிவ இல்ல குடியிருப்பு அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

புதிய கட்டிடத்தின் வரவிருக்கும் மதில் சுவர் எங்களது குடியிருப்பில் இருப்பை ஒட்டி அமைய உள்ளது.

38 வருடங்களாக குடியிருப்போர் பயன்படுத்தி வரும் சாலை மற்றும் இடம் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

இதனால் அந்தப் பகுதியில் நடப்பதற்கு கூட இடம் இருக்காது மற்றும் குடியிருப்போர் இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டிடத்தின் மதில் சுவர் குடியிருப்போர் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும்.

வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகும்.

அவசர தேவைக்காக ஒரு வாகனமும் அந்த வழியை பயன்படுத்த முடியாது.

கோவில் ஊர்வலங்கள் அந்த வழியே வராது.

மக்கள் நடப்பதற்கு கூட கடினமான சூழ்நிலை ஏற்படும்.

மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டினுள் தேங்கி நிற்கும்.

இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அனைத்து அதிகாரிகளுக்கும்,தொகுதி எம்.எல்.ஏ.,கவுன்சிலர் மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சருக்கும் கொடுத்துள்ளோம்.

இதை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உணர்த்த மட்டும் வடிவ இல்ல குடியிருப்போர் சார்பாக உண்மை தன்மையை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சீ சரவணன் ஆய்வுக்கு வந்த போது மக்கள் கூடி மாற்றம் கோரி கோரிக்கை கொடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடரும்.

இவ்வாறு வட்ட வடிவ இல்ல குடியிருப்போர் நல சங்கத்தினர் பேட்டி அளித்துள்ளனர்.

திருச்சியில் பள்ளத்தில் சிக்கிய லாரி போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்



திருச்சி,தென்னூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக சிவன் கோவில் அருகே லாரி ஒன்று பெரும் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு சிறிது  சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே நின்றது.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் லாரி சாய்ந்து விடாமல் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டு பள்ளத்திலிருந்து கடந்து சென்றது.

வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதால் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு கவனம் செலுத்தி உடனடியாக சரிசெய்து கொடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

திருவல்லிக்கேணி பகுதியில் நீர்த்தேக்கம் பொதுமக்கள் அவதி


சென்னை,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள எல்லிஸ் ரோடு-அப்பாவு சந்தில் அதன் நான்கு புறங்களிலும் நீர் தேங்கி பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடனடியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறப்பு நிருபர் - உசேன் - சென்னை



கே.என்.நேரு முன்னிலையில்

எம்எல்ஏ பழனியாண்டி

ஆட்சியரிடம் கோரிக்கை மனு



தமிழ்நாடு முதலமைச்சரின்ஆணைப்படி திருவரங்கம் தொகுதிக்கான  நீண்ட நாட்கள் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின்  முகாம் அலுவலகத்தில் அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

 உடன் மாவட்ட பொறுப்பாளர் K.வைரமணி மற்றும் மேயர் M.அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

மதுரையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் 

தேசிய கொடி ஏந்தி
கோரிக்கை பேரணி



இன்று 20-08-2022 சனிக்கிழமை விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM)-ன் கோரிக்கை பேரணி நடைபெற்றது.

தமிழக அரசே! கல்வித்துறையே!

கல்வி கூடங்களில் மாணவிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்து!

பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையை விரைந்து வழங்கிடு! 

போக்சோ (POCSO) சட்டங்கள் பாரபட்சமின்றி அமுல்படுத்து!

மாணவிகள் அச்சமற்ற மனநிலையோடு கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்கிடு! 

பள்ளிகளில் தொடரும் மாணவிகள் துன்புறுத்தல் மற்றும் சந்தேக மரணங்களை தடுத்து நிறுத்திடு!என வலியுறுத்தி,

மதுரை தெற்கு வாசல்பகுதியில் இருந்து கிரைம் பிரான்ச் சந்திப்பு வரை பெண்கள் கையில் தேசிய கொடி ஏந்தி மாபெரும் மகளிர் கோரிக்கை பேரணி நடைபெற்றது.



பேரணியை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாகி  ‌சகோதரி சிந்தியா திபேன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.

விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) மண்டல தலைவர் கதிஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) வடக்கு மாவட்ட தலைவர் கதிஜா அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்.

நேஷனல் விமன் ஃபிரண்ட்(WIM) மாநில தலைவர் ஆசியா மர்யம்,நேஷனல் விமன் ஃபிரண்ட்(NWF) மாநில பொருளாளர் மஹதியா, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(CFI) தேசிய செயற்குழு உறுப்பினர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்டிபிஐ(SDPI) கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், சோக்கோ அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் செல்வ கோமதி, எஸ்டிபிஐ(SDPI) கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்புரையாற்றினார்கள்.


விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் நசரத் பேகம், விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM)வடக்கு மாவட்ட தலைவர் பாத்திமா பிலால் ஆகியோர் பேரணி கோஷம் எழுப்பினர்.

இறுதியாக விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) தெற்கு மாவட்ட தலைவர் ரோஸ்னி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்த பேரணியில்  பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

டாஸ்மாக் கடைகளை அகற்ற

மக்கள் அதிகாரம் கோரிக்கை





உறையூரில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.

மக்கள் அதிகாரம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

மக்கள் அதிகாரத்தின் சார்பில் உறையூரில் மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.மேலும் இந்த டாஸ்மாக் கடைகளால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிமகன்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சமீபத்தில் இந்த டாஸ்மாக் கடைகளால் பட்டப் பகலில் கொலையும் நடந்துள்ளது. ஆகவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது

இந்த இரு மனுக்களின் நகல்களை திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் கொடுக்கப்பட்டு அதன் நிலைமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக் கொண்ட துணை ஆணையர் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்

இந்நிகழ்விற்குமக்கள் அதிகாரம் மாநிலத் துணைச் செயலாளர் லே.செழியன் தலைமை ஏற்றார்.மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, கலைக்குழு செயலாளர் லதா,விடுதலை சிறுத்தைகள் சார்பில் தில்லை முரசு, மக்கள் உரிமை கூட்டணி சார்பில் காசிம்,மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் காஜா முஹம்மது,ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துக்குமார்,ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாலு,செல்வராஜ்ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும்

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை






















திருச்சியிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் இன்று மாலை சரியாக 4 மணியளவில் சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம்

இதில் சிறப்பு விருந்தினர்களாக தோழன் குடந்தை அரசன் தலைவர் விடுதலை புலிகள் கட்சி,KRM.ஆதிதிராவிடர் மாநில பொதுச் செயலாளர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,தோழர் இரெ.செல்வன் பெரியார் அம்பேத்கார் மக்கள் கழகம்,ப.சிவசங்கரி பரமசிவம் B.Sc.தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம்

செ.ஹைதர் அலி தலைவர் ஜக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம்,தோழர் நாகை திருவள்ளுவன் தலைவர் தமிழ் புலிகள் கட்சி,S.R.பாண்டியன் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை,அரங்க குணசேகரன் தலைவர் மக்கள் புரட்சி கழகம்,தோழர் இளமாறன் ஒருங்கிணைப்பாளர் தமிழக விடியல் கட்சி,

S.F.ஷபி அகமது துணைப் பொதுச்செயலாளர் தமஜக.H.முகமது இக்பால் மாநிலச் செயலாளர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி A.R.சுல்தான் தேவ்பந்த் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி

முன்னிலை வகித்தவர்கள் S.சண்முகராஜா மண்டல செயலாளர் M.ராயல் சித்திக்,திருச்சி மாவட்ட செயலாளர். தமஜக,MS.சரிப் ராஸிக் இனையதள பொருப்பாளர். தமஜக,MAJ.யூசுப் ராஜா மண்டல மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை K.ரியாஸ்,மாவட்ட பொருளாளர் தமஜக,B.ரபிக் ராஜா திருச்சி மேற்கு தொகுதி செயலாளர் தமஜக மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி