Articles by "நிகழ்வுகள்"
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அ.இ.அ.தி.மு.கழகம்
உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி



வட சென்னை இராயபுரம் பகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அ.இ.அ.தி.மு.கழக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.60,வது வட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

அன்புமணி ராமதாஸ்

பிறந்தநாள்

மரக்கன்று நடப்பட்டது





பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP-ன் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக தலைவர் செ.தமிழ்வாணன் தலைமையில் மரக்கன்று நடப்பட்டது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி நோட்டு பேனா வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் D.அண்ணாமலை,இரா.அறிவழகன்,R.பாலாஜி,K.மணிராஜ்,R.செல்வகுமார்,P.ஆனந் மற்றும் பாட்டாளி இளைஞர்கள் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி


திருச்சி அரசு தலைமை

மருத்துவமனையில்

பிங்க்நிற பலூன்களுடன்

விழிப்புணர்வு பேரணி



தமிழகத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.மேலும் முன்பெல்லாம் 50வயதிற்கு மேற்பட்டோரை தாக்கும் இந்நோயானது தற்போது 30 - 40 வயதுடைய வர்களுக்கும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது. இதனிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி அண்ணல்காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சக்தி ரோட்டரி கிளப் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்பக புற்றுநோய் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் பிங்க் நிற பலூன்களை கையில் ஏந்தியபடி அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் மற்றும் பி வி எம் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியானது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கி நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையை சென்று அடைந்தது.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

மீலாதுநபி

முப்பெரும் விழா

K.M.காதர் மொகிதீன்

தலைமை


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் காயிதே மில்லத் பெண்கள் அரபி பாடச்சாலை இணைந்து நடத்தக்கூடிய மீலாதுநபி முப்பெரும் விழா திருச்சி பாலக் காரை காஜாக்கடை சந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தேசியத் தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் M.A.Ex.M.P.,தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட பொருளாளரும் அரபி மதரஸா செயலாளருமான B.M.ஹுமாயூன் வரவேற்புரையுடன் திருச்சி பீமநகர் வார்டுத்தலைவர் N.அமீருதீன் தொகுத்து வழங்கினார்.நிகழ்வில் அரபி மதரஸா மாணவி கிராஅத் ஓதி நிகழ்வினை துவங்கினார். 

நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். K.M.K.ஹபிபுர் ரஹ்மான்,மாநில துணைச் செயலாளர் V.M.பாரூக்,மாநில மாணவரணி பொதுச்செயலாளர் அன்சர் அலி,ஏர்போர்ட் வார்டு தலைவர் முஹம்மது பாரூக் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்  மௌலானா முஃப்தி.H.உமர் பாரூக் மஹ்ழரி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நிகழ்வில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி.முஃப்தி ஜலீல் சுல்தான் மன்பயீ , மாவட்ட துணைச்செயலாளர் சம்சுதீன், துணைத் தலைவர்  முஹம்மது பீர், மேற்கு தொகுதி அமைப்பாளர் அப்துல் கபூர், பேராசிரியர். மொய்தீன் அப்துல்காதர்,பூக்கொல்லை செயலாளர் முகம்மது கலீல் காட்டூர் பகுதி தலைவர் ஜஹாங்கீர்பாஷா, செயலாளர் முகம்மது கலீல்,

ஆழ்வார்தோப்பு தலைவர் A.ஆரிப்,STU தலைவர் K.K.மஸ்தான் STU செயலாளர் S.ஷாஜகான், இளைஞரணி மாவட்ட செயலாளர் G.H.சைய்யது ஹக்கீம், மாவட்டத் துணைத் தலைவர் S.ஷேக் முஹம்மது கௌஸ்,இளைஞரணி ஜஹாங்கிர் பாஷா,R.நவாப் கான்,M.முகமது நியாஸ்,

மாணவரணி மாவட்ட செயலாளர் முஹம்மது பாசித் முன்னிலை வகுக்க சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீலாது விழாவில் கலந்து சிறப்பித்தனர்.மதராஸா ஆசிரியர்கள்,மதுரை ஹனீபா ஜிகர்தண்டா உரிமையாளர், மற்றும் மார்கெட் சையது ஹாஜியார்

மணிச்சுடர் ஊடகவியலாளர் முஹம்மது சாகுல்,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் M.சாதிக்குல் அமீன் மற்றும்  ஏர்போர்ட் ரஹீம்,A.K.அலாவுதீன், மகளிரணி மாவட்ட பொருளாளர் ஆரிஃபா,மகளிரணி துணைச் செயலாளர் ரஜபுனிஷா,ராபியத்துல் பசிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு நன்றி செலுத்தபட்டது.

மேலும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

QMASS 

காயிதே மில்லத்

ஆட்டோ ஸ்டீல் சங்க

புதிய நிர்வாகிகள்


காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டில் சங்கத்தின் 27வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் 29/09/2022. வியாழக்கிழமை காலை 11.30.மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள நியூ டைமன் மஹாலில் (அரிஸ்டோ A/c) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாநகர தி.மு.க.,செயலாளரும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன்.M.A. கலந்து கொண்டார்.

கூட்டம் QMASS.சங்க காரியகமிட்டி தலைவர் A.அப்துல்  நிசார்.B.com.Ex.Mc.தலைமையில் நடைபெற்றது.

தற்போதுள்ள நிறுவன உறுப்பினர்கள்:

K.பஷீர் அகமது,A.அபுபக்கர்,N.சையத் இப்ராஹிம்,A.அபுதாஹிர்

காரிய கமிட்டி உறுப்பினர்கள்:

P.முகமது ஆதம்,S.தேவராஜ்,B.அப்துய் ஜலீல்,M.உபைத்துல்லாஹ்.V.G.M.மகாலிங்கம்,M.இக்பால்,K.காதர் கான்,N.ராஜ கோபால்,M.S.R.சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைவர் K.M.S.ரபீக் அஹமத்


துணைத் தலைவர் P.சம்பத்குமார்


செயலாளர் N.ஜாகிர் உசேன்

துணைச் செயலாளர்
M.ஜூபர் அலி அகமது

இணைச் செயலாளர்
M.ஷஹாவுதீன்

பொருளாளர் M.F.நூர் முகமது

காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  நியமனம்

தலைவராக K.M.S.ரபீக் அஹமத்

துணைத் தலைவராக P.சம்பத்குமார்

செயலாளராக N.ஜாகிர் உசேன்

துணைச் செயலாளராக M.ஜூபர் அலி அகமது

இணைச்செயலாளராக M.ஷஹாவுதீன்

பொருளாளராக M.F.நூர் முகமது ஆகியோரும்

செயற்குழு உறுப்பினர்களாக

N.ஷேக் அலாவுதீன்,S.முகமது யூசுப்,J.சவ்கத் அலி,ஹாஜி.V.M.அக்பர் அலி,A.அப்துல் ரஹ்மான்,S.R.அயாஸ் ஷபீக் அகமது  D.பால குமார்,S.முகமது பாரூக்,S.சார்லஸ்,M.அம்மானுல்லாஹ்,A.அப்துல் ரஷீத்,S.சையத் இப்ராஹிம், K.முகமது மன்சூர்,M.முகமது நியாஸ் ஆகியோரும் நியமனம் செய்யப் பட்டனர்.  

இதனைத் தொடர்ந்து மேயருக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் QMASS.தலைவர் ஷீல்டுகள் வழங்கினார்.

M.F.நூர் முகமது நன்றியுரை வழங்கினார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

கே.என்.ராமஜெயம்

திருவுருவ சிலைக்கு

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மரியாதை


திருச்சி கேர் கல்லூரியில்  கழக முதன்மைச் செயலாளர்-நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் மறைந்த தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

SDPI கட்சி பொறியாளர் அணி

மாநில செயற்குழு கூட்டம்  



திருச்சியில் மாநிலத் தலைவர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.

பொறியாளர் அணியின் மாநில பொறுப்பாளரும் SDPI  கட்சியின் மாநில செயலாளருமான A.அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார்.

பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் முகமது பிலால் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொறியாளர் அணியின்இணையதளத்தை (WWW.SDEW.in) துவக்கி வைத்து பட்டய பொறியாளரான தனது பெயரையும் பொறியாளர் அணியில் பதிவு செய்து கொண்டார்.

பின்னர் பொறியாளர் அணியின் சார்பாக கலந்துரையாடல் நிகழ்வில்  அணியின் மாநில துணை செயலாளர் முகமது அல்தாப்,மாநில பொருளாளர் சேக் முகமது இலியாஸ்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் இளையான்குடி ஷேக் மஸ்தான் மற்றும் திருச்சி N.G.சதாம் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

இதில் பல்வேறு மாவட்ட பொறியாளர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக பொறியாளர் அணி HQ மாநில துணைத்தலைவர் ரஃபி நன்றியுரை ஆற்றினார்).

தகவல் - இளையான்குடி M.ஷாஜஹான் 

ஆசிரியர் - மறுமைவெற்றி&உண்மைஉணர்வு மாத இதழ்கள்

புனித வளனார் கல்லூரி

மாணவர்கள்

குடை பிடித்து விழிப்புணர்வு




அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கவும் தற்கொலைக்கு முயல்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தவும், உலக சுகாதார நிறுவனமும் தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பும்  இணைந்து கூட்டாகப் பணியாற்றுகின்றன. 

குறிப்பாக மன அழுத்தம் மட்டுமே 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. அதுபோல மது பழக்கத்தினாலும் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி புனித வளனார் கல்லூரி கவுன்சிலிங் துறை சார்பில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. 

தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் குடை பிடித்து விழிப்புணர்வு பாதைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

ஆரோக்கியமான உணவு குறித்த

விழிப்புணர்வு

அடுப்பில்லா சமையல் போட்டி


உணவே மருந்து என்ற வாழ்வியலை கொண்ட நாம் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி வருகிறோம் இதனால் பல நோய்கள் ‌ ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளோம்.

ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் Talam shop மற்றும் அறுசுவை ஆற்றல் இணைந்து நடத்திய அடுப்பில்லா சமையல் போட்டி ‌ கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.

விதவிதமாகவோ ஒரே மாதிரியாகவோ சாப்பிடும் வழக்கத்துக்கு இடையில் வாரத்தில் ஒரு நாளாவது எளிய உணவைச் சாப்பிடலாம். இதற்காகத்தான் பண்டிகை, விசேஷ நாட்களில் குறிப்பிட்ட சில விரதம் இருக்கும் முறையைப் பலரும் கடைப்பிடித்தனர்.


சமைக்காத உணவுக்கும் நாம் அடிக்கடி இடம் தரலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் வழக்கமான உணவிலிருந்து விடுதலை பெறலாம். அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ‌ உணவு வகைகள் குறித்த சமையல் போட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‌ போட்டியானது நடைபெற்றது.


போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் ஆரோக்கியமான அடிப்பில்லா இயற்கை உணவுகளான முட்டைகோஸ் சமோசா,ஹெல்த்தி மயோனிஸ்,வேக வைக்காத இட்லி,தயிர் இல்லா தயிர் சாதம்,குக்கர் இல்லா பிரியாணி,கசகசா அல்வா போன்ற அட்டகாசமான உணவுகளுடன் இப்போட்டி நடந்தது.

இப்போடிக்கு சிறப்பு விருந்தினராக மாஸ்டர் செஃப் டைட்டில் வின்னர் தேவகி கலந்து கொண்டார்.அவர்களுடன் அறுவை ஆற்றல் நிறுவனர் ஆற்றல் சரண்யா இப்போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.போட்டியில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் பரிசு - தீக்ஷித்தா, இரண்டாம் பரிசு - சித்ரா, மூன்றாம் பரிசு - ஜனனி ஆகியோர் பெற்றனர். அறுசுவை ஆற்றல் நிறுவனர் சரண்யா போட்டி குறித்து கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்பது இன்றியமையாததாகும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்தி வருகிறோம்.தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

மூன்றாம் முழுமைத்‌‌ திட்டம் (2027-2046)

மேயர் பிரியா ராஜன்

துவங்கி வைத்தார்







தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ் நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  - சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாம் முழுமைத்‌‌ திட்டம் (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலின் திட்ட தொடக்கப் பயிலரங்கத்தினை‌ அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து துவங்கி வைத்தார் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்.

தா.மோ.அன்பரசன்,மாதவரம் எஸ் சுதர்சனம் MLA வாழ்த்துரைத்தனர். சிறப்புமிக்க இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு முதன்மை செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உயர் அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ஆல் இந்திய பேக் வேர்டு

அண்டு மைனாரிட்டி கவுன்சில்

17-வது மாநில மாநாடு







ஆல் இந்திய பேக் வேர்டு அண்டு மைனாரிட்டி கவுன்சில்  (BAMCEF)சார்பாக 18.09.2022 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் திருச்சி மாவட்டம் சுமங்கலி மகாலில் நடைபெற்ற 17-வது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான் கலந்துகொண்டு மக்களுக்கு மத்திய அரசாங்கத்தின் அநீதி குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வில் முஸ்லிம் யூத் லீக் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி. S.ஷேக் முஹம்மது கௌஸ் மற்றும் பேராசிரியர் M.மொய்தீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

கேரள மாநில

ஜமியத்துல் உலமா சபை

திருச்சி IUML செயலாளருடன்

ஆலோசனை








நேற்றைய தினம் 17.09.2022 சனிக்கிழமை த்தில் புகழ் பெற்ற சமஸ்த்த ஜமியத்துல் உலமா சபையினுடைய நிர்வாகப் பெருமக்கள், கல்லூரியின் தாளாளர், செயலாளர் மற்றும் உலமாக்கள் மரியாதை நிமித்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். K.M.K.ஹபிபுர் ரஹ்மான் அவர்களை சந்தித்தனர்.

நிகழ்வில் தமிழ்நாட்டில் அரபி கல்லூரி மற்றும் மதரஸா தொடங்கவும், அதற்கான இடம் தெரிவு செய்து பள்ளி மற்றும் அரபி கல்லூரி ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹாஜி.G.H. ஹக்கீம், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி. S.ஷேக் முஹம்மது கௌஸ் மற்றும் பேராசிரியர் மொய்தீன் அப்துல் காதர், AIKMCC  திருச்சி மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது ஷகீர், மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்க பொதுக்குழு

K.M.S.ரபீக் அகமது தகவல்

K.M.S.ரபீக் அகமது




















திருச்சியில் வருகிற 29ந் தேதி காயிதேமில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெறுகிறது

இது குறித்து காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்க தலைவர் K.M.S ரபீக் அஹமது கூறியிருப்பதாவது 

காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் வருகிற 29ந் தேதி (வியாழக்கிழமை) திருச்சி அரிஸ்டோ டைமன் மஹாலில் நடக்கிறது  

இதைதொடர்ந்து இன்று (18 ந்தேதி) வேட்பு மனுக்கள் பெறப்பட்டது

எனவே சங்க உறுப்பினர்கள் உடனடியாக சந்தாவை செலுத்தி போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சந்தாவை திருச்சி பீம நகரில் உள்ள கே.எம்.எஸ் மஹால் சங்க தலைமை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.எனவே  29ந் தேதி வியாழக்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை நடக்கும் பொதுக்குழுவில் &தேர்தல் மற்றும்  விருந்திலும் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு காயிதே மில்லத்  ஸ்டீல் சங்கத்தின் தலைவர் K.M.S.ரபீக் அகமது கூறியுள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி