Articles by "அறிவிப்புகள்"
அறிவிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


அனைவருக்கும் வாழ்த்துக்கள்


இதுவரை வெளிவந்த அனைத்து செய்திகளும் இனி ibinews.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஐபிஐ நியூஸ் நிர்வாகம்.

மின் நிறுத்தம் 


உளுந்தூர்பேட்டை,  எறையூர் துணை மின் நிலையங்கள்

எதிர்வரும் 15.10.2022 சனிக்கிழமை அன்று 110/33-11 கி.வோ உளுந்தூர்பேட்டை மற்றும் 33/11 கி.வோ. எறையூர் துணை மின் நிலையங்களில் காலை 9.00 மணி முதல் மதியம் 17.00 மணி வரை மேம்பாட்டு (ம) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

1.உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட “உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம் வண்டிப்பாயைம் சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார்கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், கிள்ளனூர், குரும்பூர்,  வண்டிபாளையம்,  மற்றும் நகர்"

2.எறையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட "புகைப்பட்டி, அ.குஞ்சரம், பி.குஞ்சரம் கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வடகுறும்பூர், எல்லைகிராமம், கூவாடு,தேன்குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு" .

3 சேந்தநாடு துணை மின் நிலையத்திற்கு செல்லக்கூடிய உயர் மின்னழுத்த பாதையில் இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு காலை 09.30 மணி முதல் 11 30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்விநியோகம் இருக்காது 

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கூட்டடிகள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியாம்பாயைம் தொப்பையாங்குளம், மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர் திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிபாளையம், மைலங்குப்பம், சேந்தமங்கலம் மற்றும் சேந்தநாடு.

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

உயர்நிலை ஆலோசனை குழு

மாநில உறுப்பினர் பதவி

உயர்நிலை ஆலோசனை குழு மாநில உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விருப்ப முள்ளவர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநில உறுப்பினர் பதவியில் சேர்வதற்கு 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் முதியோர் நல மேம்பாட்டுகளில் குறைந்த பட்சம் 3 வருட அனுபவமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் மாநில அளவில் முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவில் உள்ள அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று வருடம் கடந்த நிலையில் சென்னை மாவட்டத்தை சார்ந்த விருப்பமுள்ளவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநில உறுப்பினர் பதவியில் சேர்வதற்கு 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முதியோர் நல மேம்பாட்டுகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

விருப்பமுள்ளவர்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், சென்னை 600001 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது chndswo4568@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 21.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிறப்பு நிருபர் - R.முகமது மீரான் -  சென்னை

நாளை (13.10.2022)

மின் நிறுத்தம்

செய்யப்படும் பகுதிகள்



திருச்சி மாவட்டத்தில் நாளை (13.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் லால்குடி கோட்டம் நத்தம் வாட்டர் ஒர்க்ஸ் உயர் அழுத்த மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நத்தம் வடுகர் பேட்டை பழனியாண்டி நகர் மற்றும் வாட்டர் ஒர்க்ஸ் பகுதிகளில் நாளை (13.10.2022) காலை 10 மணி முதல் மதியம் மூன்று மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பேரிடர் கால அவசர எண்கள்


திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி பிரிவு அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பேரிடர் காலங்களில் 24x7 என்ற முறையில் கீழ்கண்ட காவல் அலுவலர்கள் கொண்டு கொண்டு இயங்கவுள்ளது.

பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்:

0431-2333249,

0431-2333629,

9498100645

உதவி ஆய்வாளர் செந்தில்குமார்,9498156865

உதவி ஆய்வாளர் கௌதமன் 9498157729,

மு.நி.கா 1979 தீபக் 9498112576

ஆகிய  எண்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

டாஸ்மாக் கடைகள் மூட

ஆட்சியர் உத்தரவு




திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வருகிற 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், 9ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகையான மதுபான கடைகளை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த மதுபான கடைகளுடன் இயங்கும் பார்களும், மதுபான சில்லறை விற்பனை கூடங்களும், பெரிய ஓட்டல்களில் செயல்படும் பார்களும் மூடி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தேசிய விளையாட்டு

விருதுகள் 2022

கடைசி தேதி நீடிப்பு

தேசிய விளையாட்டு விருதுகள் 2022-க்கான கடைசி தேதியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அக்டோபர் 1 வரை நீடித்துள்ளது.

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது,  தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.

இதற்கான அறிவிப்பு  அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 27 என்பதிலிருந்து 2022 அக்டோபர் 1–க்கு (சனிக்கிழமை) நீடிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விளையாட்டு வீர்ர்கள் / பயிற்சியாளர்கள் / அமைப்புகள் / பல்கலைக்கழகங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

அக்டோபர் 1-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் படமாட்டாது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

சட்டவிரோத இணையதளம்

அரசுக்கு வருவாய் இழப்பு

சர்வதேச அழைப்புகளுக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு கட்டமைப்பை தொலைத்தொடர்புத் துறை கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள உள்நாட்டு மொபைல் மற்றும் வயர்லைன் வாடிக்கை யாளர்களுக்கு சர்வதேச அழைப்பு வசதியை அளிப்பதற்காக சட்டவிரோதமாக இணையதளம் மூலம் தொலைத் தொடர்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதை தொலைத்தொடர்பு துறை கண்டுபிடித்துள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதமான கட்டமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும்.கடந்த 4 மாதங்களில் 30 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதுபோன்ற, சட்டவிரோத தொலைத் தொடர்பு அமைப்புகள் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 18001104204/1963 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு  புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

மத்திய அரசு

பணியாளர் தேர்வு

இலவச பயிற்சி


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (STAFF SELECTION COMMISSION) மூலம் உதவி தணிக்கை அதிகாரி (Assistant Audit Officer), உதவி கணக்கு அதிகாரி (Assistant Account Officer), உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer), தணிக்கையாளர்(Auditor), ஆய்வாளர் (Central Bureau of Narcotics), வருமான வரித்துறை ஆய்வாளர்(CBDT) உள்ளிட்ட சுமார் 20,000 பணியிடங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு அளவிலான சார்நிலைத் தேர்விற்கான(Combined Graduate Level Examination) அறிவிப்பாணை 17.09.2022 அன்று வெளிவந்துள்ளது.

இப்பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடைய வேலை நாடும் இளைஞர்கள் இணையவழியில் (www.ssc.nic.in) 08.10.2022 வரை விண்ணப்பிக்கலாம், இப்போட்டித்தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 29.09.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலை நாடுநர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு

ஆட்சியர் தகவல்


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நடப்பு 2022-23ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல்-II, பிர்கா அளவில் மக்காச்சோளம்-II மற்றும் பருத்தி-II பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும், நெல்- II, மக்காச்சோளம்-11 மற்றும் பருத்தி-II பயிர்களை பயிர் காப்பீடு செய்ய, வரும் நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகளின் நலன்கருதி தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து கொள்ள ஏதுவாக இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களும் (08.11.2022) முதல் (15.11.2022) வரை 24 மணி நேரமும் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய முன்மொழி படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.

இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.558/-, பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.566/- மற்றும் மக்காச் சோளம் பயிருக்கு ஒருஏக்கருக்கு பிரீமியமாக ரூ.388/- செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.

அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.

எனவே, விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சியில் நாளை(28.09.2022)

மக்களை தேடி மாநகராட்சி

குறைதீர்ப்பு முகாம்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆணையின்படி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் "மக்களைத்தேடி மாநகராட்சி" குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமையன்று நடைபெறுகிறது. 

 "மக்களைத்தேடி மாநகராட்சி" குறை தீர்க்கும் முகாம் வருகின்ற புதன்கிழமை 28.09.2022-ம் தேதி அன்று மண்டலம் எண்:3 கைலாஷ் நகர், காட்டூர் சி.கே.சுமதி சந்தோஷ் மஹாலில் நடைபெற உள்ளது. இம்மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 13 வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக இக்குறைதீர்க்கும் முகாமில் அளித்து  பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி


தீபாவளிக்கு சிறப்பு பேருந்து

சந்திர பிரியங்கா அறிவிப்பு


அமைச்சர் சந்திர பிரியங்கா

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவிப்பு.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கண்டன ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்  தலைவர்கள் மீதான NIA மற்றும் ED-ன் கைது நடவடிக்கைகள் மற்றும் அத்துமீறிய சோதனைகளை கண்டித்து 

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

நாள்:25-09-2022, ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை10.30மணி.

இடம்: உக்கடம், கோவை.

வாருங்கள் தோழர்களே 

பாசிச பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறைக்கு (ED) எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம்.அழைக்கிறது  கோவை மாவட்ட  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இவ்வாறு கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளது.


சிறப்பு நிருபர் - M.முகமது யாசீன் - கோவை

வன உயிரின வார விழா

ஆன்லைன் போட்டி


திருச்சி வனக்கோட்டம் சார்பில் வன உயிரின  வார விழா அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை,பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் ஆன்லைனில் நடக்கிறது முதல் கட்டமாக கட்டுரை போட்டி இனறு தொடங்குகிறது.

ஒன்பதாம் வகுப்பு முதல் +2 மாணவ மாணவிகள் வண்ணத்துப்பூச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில்  கல்லூரி மாணவர்கள் "உயிரியல் பூங்கா மற்றும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு என்ற தலைப்பிலும் கட்டுரைகள் எழுதலாம்.

கட்டுரை எழுதும் தாளில் வலது ஓரத்தில் மாணவர் பெயர், செல்போன், பள்ளி பெயர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதற்கான அடையாள அட்டை ஆகியவற்றுடன் இன்று முதல் 24 ஆம் தேதி  மாலை 5. 40 வரை தங்களது பதிவுகளை foresttrichy@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், 9789967171என்ற whatsapp எண்ணிலும் பதிவு செய்யலாம்.

பேச்சுப் போட்டிக்கு எல்கேஜி முதல் வகுப்பு, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு ,ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் மூன்று பிரிவுகளாக "வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம் என்ற தலைப்பில்.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12 வரை, கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் எனும் மூன்று பிரிவுகளில் மனித/வன உயிர்  மோதல் மற்றும் கட்டுப்படுத்துதல்  நடவடிக்கைகள் என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து நிமிடங்களுக்குள் பேசி குறைந்தபட்சம் 20 எம்பி அளவுள்ள வீடியோவாக 24 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதே வரிசையில் மூன்று முதல் மூன்று பிரிவுகள் வன உயிரின பாதுகாப்பு என்ற தலைப்பிலும் இரண்டாவது மூன்றாவது பிரிவினர் காலநிலை மாற்றம் மற்றும் வன உயிரினம் என்ற தலைப்பிலும் ஓவியங்களில் வரைந்து ஜேபிஇஜி ஃபைலாக மாணவர் பெயர், வகுப்பு, பள்ளி, செல்போன்௭ண், மாணவர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் இமெயில்,வாட்ஸப்பில் 24ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் 

இத்தகவலை மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி


நாளை 23.09.2022

மின்தடை அறிவிப்பு


மதுரை சுப்பிரமணியபுரம் மின் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 23.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மாதாந்திரப் வேலைகள் நடைபெற இருப்பதால் மின்தடை (Total shut down) ஏற்படும் என்பதினை தெரிவித்துக் கொள்கிறோம்.மதுரை மின்சார வாரியம் அறிவிப்பு.

நமது நிருபர் - சென்னை ஷேக் அப்துல்லா


திருச்சி மாவட்டத்தில்

இன்று (22.09.2022) காய்ச்சல் முகாம்

நடைபெறும் இடங்கள்



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன் காய்ச்சல் பரவி வருகிறது. மழைக்காலங்களில் பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முதல் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (22.09.2022) திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ரேசனில் பொருட்களே வாங்காதவார்கள் கெளரவ அட்டை வாங்கி கொள்ளலாம் ராதாகிருஷ்ணன்




கூட்டுறவுத்துறையில் 3997 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில் , உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் வாகனத்தில் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் கல்லுக்குழி நியாய விலைக்கடை யினையும், டிவிஎஸ் டோல்கேட், மின் வாரிய அலுவலகம் அருகிலுள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கினையும் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் ....

தமிழ்நாட்டில் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

அரிசி கடத்தலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களை கைது செய்ய கூறியுள்ளோம். அதன்படி சக்கரவர்த்தி என்கிற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிசி கடத்தலில் ஈடுபட்ட 111 பேரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்.

கூட்டுறவுத்துறையில் 3997 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரேசன் பொருள் வாங்காதவர்கள் குறித்து கணக்கு எடுப்பது என்பது அதை ஒழுங்கப்படுத்ததானே தவிர வேறு எதற்கும் இல்லை. அது தொடர்பாக எந்த பீதியும் தேவையில்லை.

பொருட்களே தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது. 60 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் அதை வைத்துள்ளார்கள். ரேசனில் பொருட்களே வாங்காதவார்கள் கெளரவ அட்டை வாங்கி கொள்ளலாம் என்றார். 

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

 கால்நடை பல்கலைக்கழகத்தில்

நாளை(22.09.2022) ஆடு வளர்ப்பு பயிற்சி


திருச்சி கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் நாளை(22.09.2022 )நடக்கிறது.

இலவச அனுமதி உடன் கூடிய முகாமில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டு இனங்கள் ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இன விருத்தி பராமரிப்பு தீவன மேலாண்மை தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு நோய் தடுப்பு முறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு 0431-2331715 என்று எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இத்தகவலை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

 திருச்சி மாநகரில் நாளை (22.09.2022)

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்


திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின் நிலையத்தில் நாளை (22.09.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராபட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர்,

காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, அரசு காலணி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லங்குளம், எடமலைப்பட்டி புதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திர நகர், ஆர்.எம்.எஸ் காலனி, ராஜீவ் காந்தி நகர்,

கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சாபூர் ஆகிய பகுதிகளில் நாளை (22.09.2022) காலை 9:45 மணி முதல் மாலை 3.00 மணி வரை விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி


திருச்சியில் நாளை (20.09.2022)

மின்நிறுத்தம் செய்யப்படும்

பகுதிகள்


திருச்சி வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (20.09.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9:45 மணி முதல் பகல் 2 மணி வரை ஜெய் நகர் திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப் செக்டர், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி நகர், எழில் நகர், அய்யம்பட்டி,

வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்சாலை, திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோப்பு, ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (20.09.2022) மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி