18.10.2022 தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்து
குட்டி காவலர்
மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி
12.படிக்கும் மாணவிக்கு
மாணவன் தாலிகட்டிய சம்பவம்
ஷாகுல்ஹமீது தலைமையில்
அர்-ரஹ்மான் நிஸ்வான்
மதரஸா வின் ஆண்டு விழா
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் பேங்க் காலனி அர்-ரஹ்மான் நிஸ்வான்(பெண்கள்) மதரஸா வின் ஆண்டு விழா இன்று சனிக்கிழமை (08.10.2022) காலை 9.30 மணிக்கு அர் ரஹ்மான் நிஸ்வான் மதரசா தலைவர் ஹாஜி ஷாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது.
குடும்பத் தலைவிகள் 50 பேர் தங்களது மக்தப் படிக்கும் குழந்தைகளுடன் நிஸ்வான் மதரஸாவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் படித்த துவா பயான் சூரா மற்றும் பல்வேறு தலைப்புகளில் பயான் செய்தனர்
அவர்களை பாராட்டி பரிசு பொருள்களும் அர்-ரஹ்மான் நிஸ்வான் மதரஸா நிர்வாக கமிட்டி. ஸ்டேட் பாங்க் காலனி சார்பாக பாராட்டு சான்றிதழும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்து ஒத்துழைப்பு வழங்கிய மஹல்லா வாசிகளை இமாம் யாஸின் முஸம்பில் பாராட்டினார்.
ஷோபித் ஜி குமாவத்துக்கு
இந்திய குமாவத் க்ஷத்ரிய
மஹாசபா மரியாதை
விஜய் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய நிறுவனத்தில் (இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்) உதவி தணிக்கை அதிகாரி ஷோபித் ஜி குமாவத் மற்றும் அவரது தந்தை ஸ்ரீமான் ராஜேஷ் ஜி குமாவத்தின் மேவாலா குடும்பம் இந்திய குமாவத் க்ஷத்ரிய மஹாசபாவால் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குமாவத் சமாஜ் முலக்கடை தலைவர் ஓம்பிரகாஷ் லார்னா துணைத் தலைவர் அம்ராராம் பிலோதியா பொதுச்செயலர் கெவர்லால் பிலோதியா மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நமதுநிருபர் - பாபுலால் குமாவத் - சென்னை
Our
Correspondent - Babulal Kumawat – Chennai
மாநகராட்சி பணிகளை
விரைந்து முடிக்க
பிரியா ராஜன் ஆலோசனை
பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டல அலுவலகத்தில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சி, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிக ளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பங்கேற்று நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை.
சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
உலக சுற்றுலா தினம்
என்.சி.சி. மாணவர்கள் ஊர்வலம்
திருச்சியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டும் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை வலியுறுத்தியும் என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஜி வெற்றிவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அஜய் தங்கம், காவல்துறை துணை ஆணையர் மாணவர்களிடையே ஆறு மற்றும் குளங்களைக் காப்பதில் மாணவர்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் கூறுகையில் 3வது உலகப் போர் என்று ஒன்று நேர்ந்தால் அது குடிதண்ணிருக்கான போராகவே இருக்கும் என்று குடிநீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இறுதியில் லெப்டினன்ட் கர்னல் அஜய் குமார், சேனா மெடல், 3 (த.நா) கூட்டுத் தொழில் நுட்ப தேசிய மாணவர் படை அணியின் கட்டளை அதிகாரி நன்றி உரையாற்றினார்.
பேரணியில், 10 அதிகாரிகள், 300 மாணவர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடையே குடிநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை பிடித்தும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பேரணியானது தேசிய மாணவர் படை (என்.சி.சி) அலுவலகத்திலிருந்து தொடங்கி தலைமை தபால் நிலையம், புகைவண்டி நிலையம், மத்திய பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் என்.சி.சி. அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பொதுமக்கள்
திடீர் ஆர்ப்பாட்டம்
காவல் ஆய்வாளர்
விஜயபாஸ்கர் சமரசம்
சென்னை ரெட்டேரி அருகே உள்ள விநாயகபுரத்தில் மழை நீர் தேங்குவதால் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அதில் கொசுக்கள் உருவாகி பல தொல்லைகள் கொடுப்பதாகவும் இதை சரி செய்ய கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் திடீரென விநாயகபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.இருப்பினும் பொதுமக்கள் யாரும் அவ்விடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சுமூகமாக பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.
இதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.அங்கு வந்த காவல் உதவி ஆணையாளர் ஆய்வாளர் விஜயபாஸ்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
நமதுநிருபர் - பாபுலால் குமாவத் - சென்னை
Our Correspondent - Babulal Kumawat - Chennai
சிதம்பரத்தில்
கால் பாத அழுத்த
சிகிச்சை வகுப்பு
QMASS
காயிதே மில்லத்
ஆட்டோ ஸ்டீல் சங்க
புதிய நிர்வாகிகள்
காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டில் சங்கத்தின் 27வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் 29/09/2022. வியாழக்கிழமை காலை 11.30.மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள நியூ டைமன் மஹாலில் (அரிஸ்டோ A/c) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாநகர தி.மு.க.,செயலாளரும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன்.M.A. கலந்து கொண்டார்.
கூட்டம் QMASS.சங்க காரியகமிட்டி தலைவர் A.அப்துல் நிசார்.B.com.Ex.Mc.தலைமையில் நடைபெற்றது.
தற்போதுள்ள நிறுவன உறுப்பினர்கள்:
K.பஷீர் அகமது,A.அபுபக்கர்,N.சையத் இப்ராஹிம்,A.அபுதாஹிர்
காரிய கமிட்டி உறுப்பினர்கள்:
P.முகமது ஆதம்,S.தேவராஜ்,B.அப்துய் ஜலீல்,M.உபைத்துல்லாஹ்.V.G.M.மகாலிங்கம்,M.இக்பால்,K.காதர் கான்,N.ராஜ கோபால்,M.S.R.சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர் K.M.S.ரபீக் அஹமத் |
துணைத் தலைவர் P.சம்பத்குமார் |
செயலாளர் N.ஜாகிர் உசேன் |
துணைச் செயலாளர் M.ஜூபர் அலி அகமது |
இணைச் செயலாளர் M.ஷஹாவுதீன் |
பொருளாளர் M.F.நூர் முகமது |
காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம்
தலைவராக K.M.S.ரபீக் அஹமத்
துணைத் தலைவராக P.சம்பத்குமார்
செயலாளராக N.ஜாகிர் உசேன்
துணைச் செயலாளராக M.ஜூபர் அலி அகமது
இணைச்செயலாளராக M.ஷஹாவுதீன்
பொருளாளராக M.F.நூர் முகமது ஆகியோரும்
செயற்குழு உறுப்பினர்களாக
N.ஷேக் அலாவுதீன்,S.முகமது யூசுப்,J.சவ்கத் அலி,ஹாஜி.V.M.அக்பர் அலி,A.அப்துல் ரஹ்மான்,S.R.அயாஸ் ஷபீக் அகமது D.பால குமார்,S.முகமது பாரூக்,S.சார்லஸ்,M.அம்மானுல்லாஹ்,A.அப்துல் ரஷீத்,S.சையத் இப்ராஹிம், K.முகமது மன்சூர்,M.முகமது நியாஸ் ஆகியோரும் நியமனம் செய்யப் பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மேயருக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் QMASS.தலைவர் ஷீல்டுகள் வழங்கினார்.
M.F.நூர் முகமது நன்றியுரை வழங்கினார்.
இந்திய அரசியலமைப்பு
பாதுகாப்பு நடைப்பயணம்
பிரதமர் மோடி ஆட்சியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மதநல்லிணக்க நல்லாட்சி அமைய இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைப்பயணம் இன்று 25 9 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி 75 கி.மீ. தூரத்தை மூன்று நாட்களில் ஸ்ரீபெரும்புதூர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி நினைவிடம் சென்று இந்த நடைபயணம் பேரணி முடிவடையும்
நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் K S அழகிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M C சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் தணிகாசலம் 63 வது வட்ட தலைவர் S நயிப்கான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர்.
அறியப்படாத சுதந்திரப்
போராட்ட வீரர்களை
அடையாளம் காண வேண்டும்
சு.திருநாவுக்கரசர்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் - திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்காட்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் கடந்த 22-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படக் கண்காட்சியை திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த பல்வேறு வீரர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனினும் கண்காட்சி நடத்தப்படும் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த தகவல்களை இணைத்து கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.
அத்தகைய போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை திரட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு தரப்பினரைக் கொண்ட குழுவை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவச்சிலைக்கு அவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அரங்கில் அமைக்கப்ட்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், காச நோய் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள், இந்திய அஞ்சல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் மக்களவை உறுப்பினர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு அவர் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் (தஞ்சாவூர்) கே.ஆனந்தபிரபு, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அனிதா, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழும உறுப்பினர் க. சதாசிவம், புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் க.லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் இசை மற்றும் நாடகப் பிரிவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய-நேபாள
எல்லையில்
அமித் ஷாஆய்வு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய-நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்று ஆய்வு செய்தார்.
அமித் ஷா, ஃபதேபூர், பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் பிஓபி கட்டிடங்களை திறந்து வைத்து, பணியாளர்களுடன் உரையாடினார். அவர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், புத்தி காளி மாதா கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக் கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாக அவர் கூறினார்.
கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உழைத்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு, நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நமது எல்லைகளை பாதுகாக்கும் தீர்மானத்தை மோடி காட்டியுள்ளதாக குறிப்பிட்ட அமித் ஷா, 2008-14 வரை, எல்லை உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் ரூ.23,700 கோடியாக இருந்தது, அதை 2014-20ல் இருந்து ரூ.44,600 கோடியாக பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார் எனக் கூறினார்.நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது என்றும், ஆயுதப் படைகளின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நன்றியுள்ள நாடு என்றும் மறக்காது என்றார்.
எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
வன்னிய தியாகிகள் தினம்
ப.ம.க ஊர்வலம்
சாது மிரண்டால்…
மாடு மிரண்டால்…
நமது நிருபர் - சென்னை ஷேக் அப்துல்லா
சென்னை கேகே நகரில் உள்ள
கன்னிகாபுரம் முதல் தெரு ராமசாமி சாலை மழைநீர்வடிகால்வாய் அமைக்கும் பணியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டிடம் குலுங்கிய காரணத்தால் கார்ப்பரேஷன் ஊழியர்கள்
அந்தக் கட்டடத்தை ஆய்வு செய்வதற்காக நேரில் வந்தனர். பின்னர் கட்டிடம் உறுதித்தன்மை அறிந்து அதற்கான முடிவை பின்னர் நோட்டீஸ் மூலம்
அனுப்புவதற்கு ஆய்வு செய்தனர்.