Articles by "நமதுநிருபர் - S.ஷமி அகமது - திருச்சி"
நமதுநிருபர் - S.ஷமி அகமது - திருச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உலக சுற்றுலா தினம்

என்.சி.சி. மாணவர்கள்  ஊர்வலம்









திருச்சியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டும் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை வலியுறுத்தியும் என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. ராணுவ அதிகாரி  லெப்டினன்ட் கர்னல் ஜி வெற்றிவேல் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

அஜய் தங்கம், காவல்துறை  துணை ஆணையர் மாணவர்களிடையே ஆறு மற்றும் குளங்களைக் காப்பதில் மாணவர்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் கூறுகையில் 3வது உலகப் போர் என்று ஒன்று நேர்ந்தால் அது குடிதண்ணிருக்கான போராகவே இருக்கும் என்று குடிநீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இறுதியில் லெப்டினன்ட் கர்னல் அஜய் குமார், சேனா மெடல், 3 (த.நா) கூட்டுத் தொழில் நுட்ப தேசிய மாணவர் படை அணியின்  கட்டளை அதிகாரி நன்றி உரையாற்றினார்.

பேரணியில், 10  அதிகாரிகள், 300 மாணவர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடையே குடிநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட  பதாகைகளை பிடித்தும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பேரணியானது தேசிய மாணவர் படை (என்.சி.சி) அலுவலகத்திலிருந்து தொடங்கி தலைமை தபால் நிலையம், புகைவண்டி நிலையம், மத்திய பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் என்.சி.சி. அலுவலகத்தில் நிறைவடைந்தது.

நமதுநிருபர் - S.ஷமி அகமது - திருச்சி