08/09/22

ஆவடி மாநகராட்சி

குடிநீர் விநியோகத்தை தொடங்கி  வைத்தார் 

அமைச்சர் கே என் நேரு


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல், பனந்தோப்பு பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.113.84 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.

 இதனையடுத்து,குடிநீர் தேக்க தொட்டியிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தை தொடங்கி  வைத்தார் நகராட்சி  நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு.  

இந்நிகழ்வின்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி,மாநகர மேயர் உதயகுமார்,துணை மேயர் சூர்யகுமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய 2 பேர் கைது


திருச்சி மாவட்டத்தில் போலியான துப்பறியும் நிறுவன மூலம் ஏமாற்றப்பட்டதாக முசிறியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும்,குற்றவாளிகளை படிக்க காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படைஅமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்சியில் உள்ள சிந்தனைபுரம் மற்றும் எடமலைப்பட்டி புதூர் ஆகிய இடங்களில் கூகுள் பிசினஸ் மூலம் திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் போலியான துப்பறியும் நிறுவனம் நடத்தப்பட்டு வருவதை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய கள்ளக்குறிச்சி சேர்ந்த சதீஷ்குமார் (31) மற்றும் வசந்த் (24) ஆகிய இரண்டு பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி