08/11/22

நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பகம்

மேயர் பிரியா ராஜன் ஆய்வு







தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்-ன் ஆலோசனைப்படி,பெருநகர சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் மண்டலம் வார்டு -5க்குட்பட்ட விம்கோ நகரில் அமைந்துள்ள நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பகத்தினை ஆய்வு செய்து அவர்களின்‌ நலன்களை கேட்டறிந்தார் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் . இந்த ஆய்வின் போது திருவெற்றியூர் மண்டலகுழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

நூற்றாண்டு விழா கண்ட

திருச்சி புனித சிலுவை

தன்னாட்சிக் கல்லூரி





நூற்றாண்டு விழா:

திருச்சியில் பெண்களுக்கென இயங்கி வரும் மிகவும் புகழ்பெற்ற புனித சிலுவை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி). தென்னிந்தியாவில் உள்ள பெண்களுக்கான பழமையான கல்லூரிகளில் முதன்மையானது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று சிறப்புடன் செயலாற்றி வருகிறது.

தேசிய தர மதிப்பீட்டு:

1923 ஆம் ஆண்டில் திருச்சிலுவை கன்னியர் சண்ட சகோதரிகளால் 5 மாணவிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது.தற்போது 6236 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது.கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல் முதல்வரான அன்னை சோஃபி-ன் திறமையான வழித்தோன்றல்களைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் முனைவர் அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட்-ன் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் வளர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நான்காம் சுழற்சியில் 3.75/4 மதிப்பீட்டைப் பெற்று A" என்ற தகுதியை தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் பெற்றது.

இளங்கலைக்கான கற்றல் விளைவு:

இளங்கலை பாடப்பிரிவில் 28 துறைகளையும், முதுகலை பாடப்பிரிவில் 22 துறைகளையும்,11 ஆய்வியல் நிறைஞர் துறைகளையும் மற்றும் 13 முனைப் பட்டத்திற்கான துறைகளையும் கொண்டு சிறப்புடன் செயல்புரிகிறது.கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இளங்கலை மற்றும் 5 முதுகலை துறைகள் தொடங்கப்பட்டு உள்ளது.இளங்கலைக்கான கற்றல் விளைவுகளின் அடிப்படையிலான பாடத்திட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

Rescaps திட்டம்:

சமூகத்திற்கு சேவை செய்வதற்காக புனித சிலுவை சமூக வானொலி 90.4MH தொடங்கப்பட்டு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.இங்கு பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்,வாழ்க்கையின் சரியான மதிப்பீடுகளைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இளங்கலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக Rescaps திட்டத்திலும் மாணவர்கள் இணைந்துள்ளனர்.

கூட்டுத்திருப்பலி நிகழ்சி:

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழா தொடங்கியது.சிறப்பு விருந்தினர்களை 100 மாணவிகள் மலர்த்தூவியும், பூரணக்கும்ப ஆரத்தி எடுத்தும் கோலாகலமாக வரவேற்றனர்.நிகழ்வின் தொடக்கமாக இந்தியா மற்றும் நேபால் நாடுகளின் திருத்தந்தையின் தூதுவர் மேதகு பேராயர் லியோபோல்டோ கிரெல்லி ஆசியோடு தமிழக ஆயர் குழுமம் மற்றும் அருட்தந்தையர்களோடு இணைந்த ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிகழ்சி நடைபெற்றது. 

நூற்றாண்டு விழா சின்னம்:

கூட்டுத் திருப்பலியினைத் தொடர்ந்து 100 ஆண்டுகள் நிறைவினை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரியின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது. நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து "நிலைத்த வாய்மை நீடித்த தொண்டு உள்ளம்” என்ற விருதுவாக்கும், மீட்பினை உலகிற்கு உணர்த்தும் திருச்சிலுவையும்,தன்னம்பிக்கையினை உணர்த்தும் வண்ணத்தையும் உடைய நூற்றாண்டு விழாவின் சின்னமானது வெளியிடப்பட்டது.

கலைநிகழ்ச்சிகள்:

விழாவின் சிறப்பு விருந்தினரின் சிறப்புரைக்குப் பின் வாழ்த்து செய்திகள் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிலையிலிருந்து இன்றைய இமாலய வளர்ச்சியின் பயணத்தை ஒலி-ஒளியின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கவின் மிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

6 புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்:

நூற்றாண்டு விழாவை மேலும் சிறப்பு செய்யும் வகையில் 6 புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் கல்லூரியின் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டது. "தொழில் முனைவோம்' மேம்பாட்டுத் திட்டம்" (Entrepreneurial skill develop center) இத்திட்டமானது பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும், நிநி நிலைகளைச் சீர்படுத்தவும், முழுமையான சுதந்திரத்தைப் பெற்று வாழ்வியலை மேம்படுத்துவதற்கான எல்லைகளை விரிவுபடுத்துகின்ற நளமாக அமைகிறது.

குறைந்த கட்டணத்தில் நிறைவான மருத்துவ சேவையைப் பெறும் பிரிவு (Low cost medical unit Rapha) எனும் அடிப்படையிலான இரண்டாவது திட்டம் ஏழை எளிய மக்கள் பயன்பெறவும், அவர்களின் வாழ்வு மேம்படவும்,வாழ்த்திடவும் இத்திட்டமானது தொடங்கப்பட்டது.

சுகாதார விழிப்புணர்வினைப்பெற்று ‘விழுதுகள் நூறு' (100 free Edu first Gen) என்ற மூன்றாவது திட்டம் கல்லூரி கல்வி கற்கும் முதல் தலைமுறையினைச் சார்ந்த 100 மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் இலவச கல்வியில் கவனம் செலுத்தும் திட்டமாகும்.

புனித சிலுவை நூற்றாண்டு நினைவு கட்டடம்' (Centenary Building) எனும் திட்டமானது நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.இளையோர்,கிராமப்புர மக்கள்,தொழில் முனைவோர் வளரும் தொழிலதிபருக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் திட்டம் (100 Sur Ups) தொடங்கப்பட்டது.பின் தங்கிய கிராமத்தைச் சிறந்த கிராமமாக மாற்றும் திட்டம் (Smut Village} தொடங்கப்பட்டது.

வாழ்த்துச்செய்தி:

திருச்சிலுவை சபையின் மாநிலத் தலைவி அருட்சகோதரி லூர்து அடைக்கலசாமி தனது வாழ்த்துச்செய்தியினை வழங்கி விழாவினைச் சிறப்புச்செய்தார்.புலம்பெயர்ந்த தமிழர்களின் மாநில ஆணையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நனை மற்றும் மறு வாழ்வு துறையின் ஆணையர் மற்றும் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் மேனாள் மாணவியுமான ஜெசிந்தா லாசரஸ் (IAS) வாழ்த்துரை வழங்கினார்.

அமைச்சர்கள் சிறப்புரை:

திருச்சி கிழக்கு மண்டலத்தின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இனிகோ இருதயராஜ் சிறப்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்வினைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழவின் தொடக்கவுரையை வழங்கினார்.தமிழ்நாடு ஊரசு மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நிகழ்வின் முத்தாய்ப்பான உரையை வழங்கி சிறப்பு: செய்தார்.

நன்றியுரை:

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் துணை முதல்வரும் வரலாற்றுத்துறை தலைவருமான முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

மணப்பாறை அருகே லாரிகள் மோதல்

தீயில் கருகிய இருவர்

நாகர்கோயில் அருகே உள்ள வள்ளியூருக்கு, அரியலூரிலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டுள்ளது.லாரி, மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.இந்நிலையில், திருச்சி BHEL தொழிற்சாலையிலிருந்து தூத்துக்குடிக்கு காற்றாலை பொருட்கள் இறக்கிவிட்டு வந்துக்கொண்டிருந்த இரு லாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டி சென்றபோது ஒன்றோடு ஒன்று உரசியது.


 ஒரு லாரி மாற்று சாலைக்கு சென்று சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இரு லாரிகளும் மளமளவென தீப்பற்றி  எரிந்தது.தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் காற்றாலை லாரியில் வந்த ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவரும் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி ராமநாதன் தலைமையிலான போலீஸார் கருகிய உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தினால் நள்ளிரவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா





சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி புதூர் ஹாஜி கே கே இப்ராஹீம்அலி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தாளாளர் முகமது இப்ராம்சா ஜானி தலைமையில் நடைபெற்றது.மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் மிதிவண்டி வழங்கினார்.

உடன் பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா,இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன்,பேரூர் செயலாளர் P.A.நஜூமுதின்,கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன் சுப்ரமணியம்,மானாமதுரை சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் சுப்புரமணியம்,மாவட்ட சிறுபான்மை அணி MASEநாசர்,மாவட்ட விவசாய அணி-காளிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

S.A.N.K.S.நகீப்கான்-துணை ஆசிரியர்