09/02/22

திருச்சியில் நாளை (03.09.22)

ரம்யா பாண்டியன் யாஷிகா ஆனந்த்

வாணி போஜன் பங்கேற்கும்

நடனத் திருவிழா



தென்னிந்தியாவின் மாபெரும் நடனத் திருவிழா!!! "Dream O Fest 2022!!"

நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மஹோத்சவம்!

உங்கள் பேராதரவுடன் 12 - ஆயிரம் பார்வையாளர்களுடன் மொரைராஸ் சிட்டியில் நாளை (03.09.2022) மாலை 6மணிக்கு  நடனப் போட்டிகளுடன் தொடங்குகிறது.

ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த திரைப்பட நாயகிகள் ரம்யா பாண்டியன், வாணி போஜன், யாஷிகா ஆனந்த் மேலும் இவர்களுடன் விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து அசத்தும்  "Star Night Show"  நடைபெற உள்ளது.

டிக்கெட் தொடர்பு எண்கள்..95971 16464

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

தேச நேச திருப்பயணம்









தென்மண்டல கவுன்சில் கூட்டம்

பினராயி விஜயனை சந்தித்தார்

மு.க.ஸ்டாலின்



தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளத மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கோவளத்தில் சந்தித்துப் பேசினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கே.என்.நேரு ஆய்வு










நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு பங்கேற்று திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை  வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில்,

உடன்  தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோருடன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

மதுரை - செங்கோட்டை - மதுரை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்


ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத  சிறப்பு ரயில்கள் (06663/06664) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் வழக்கம் போல இயங்கும்

நமது நிருபர்சென்னை ஷேக் அப்துல்லா