09/11/22

பர்வீ ன் எலக்ட்ரானிக்ஸ்

டிவி சர்வீஸ் கேர்

கடை திறப்பு





சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி ஞான விநாயகர் கோவில் தெரு ஜே பிளாக் எண் 55-ல்பர்வீ ன் எலக்ட்ரானிக்ஸ் டிவி சர்வீஸ் கேர் கடை திறப்பு



டாக்டர் முகமது மீரானுக்கு

ஐ.பி.ஐ நியூஸ் வாழ்த்து





கடலூர் மாவட்டத்தில் மங்கலம்பேட்டை என்ற ஊரில் டாக்டர் முகமது மீரான் லயன்ஸ் கிளப் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.அவருடைய சேவைகள் தொடர்ந்து செயல்பட ஐ.பி.ஐ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

சிறப்பு நிருபர் - M.அப்துல் ஹமீது - விருத்தாச்சலம்

அர்-ரவ்லா ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸ்

செயல் விளக்க கூட்டம்



இன்று 11.09.2022 காலை நஞ்சப்பா நகர் அஜீஜியா பள்ளி வளாகத்தில் உள்ள பாத்திமா அரங்கத்தில் அர்-ரவ்லா ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸ் சார்பாக உம்ரா செல்லவிருக்கும் சகோதரர்கள் மற்றும் தாய்மார்களுக்கு செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.

தாவூதியா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஹாஜி சாதிக் பாட்ஷா தாவூதி உம்ரா பற்றிய விளக்கங்கள், செய்யும் முறை, புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களில் செய்யும் அமல்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அழகிய தோர் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

அங்கு தொழுகும் ஒரு ரக்கத்துக்கு ஒரு லட்சம் ரக்கத்துகள்,

ஒரு நோன்பு வைத்தால் ஒரு லட்சம் நோன்பு வைத்த நன்மை,

ஒரு ரியால் தர்மம் செய்தால் ஒரு லட்சம் ரியால் கொடுத்த நன்மை,

ஒரு குர்ஆன் கதம் செய்தால் ஒரு லட்சம் தடவை குர்ஆன் ஓதிய நன்மை

 எனப் பட்டியலிட்டு உம்ரா பயணாளிகளுக்கு ஆர்வமூட்டினார்.

நான் பேசுவதற்கு ஆர்வம் இருப்பினும் நேரம் கடந்து விட்டதால் இயலாமல் போய் விட்டது.எனினும் மனதளவில் காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை என்று எண்ணி அந்த புனித கஃபாவைத் தவாஃப் செய்கின்ற பாக்கியத்தை வல்ல அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ளான்.சென்று சிறப்பாக அமல்கள் செய்து அனைவருக்கும் துஆ செய்யுங்கள் என்று இதயப் பூர்வமாக கேட்டுக் கொண்டேன்.

தகவல் - இளையான்குடி M.ஷாஜஹான் 

ஆசிரியர் - மறுமைவெற்றி&உண்மைஉணர்வு மாத இதழ்கள்