10/14/22

மின் நிறுத்தம் 


உளுந்தூர்பேட்டை,  எறையூர் துணை மின் நிலையங்கள்

எதிர்வரும் 15.10.2022 சனிக்கிழமை அன்று 110/33-11 கி.வோ உளுந்தூர்பேட்டை மற்றும் 33/11 கி.வோ. எறையூர் துணை மின் நிலையங்களில் காலை 9.00 மணி முதல் மதியம் 17.00 மணி வரை மேம்பாட்டு (ம) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

1.உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட “உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம் வண்டிப்பாயைம் சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார்கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், கிள்ளனூர், குரும்பூர்,  வண்டிபாளையம்,  மற்றும் நகர்"

2.எறையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட "புகைப்பட்டி, அ.குஞ்சரம், பி.குஞ்சரம் கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வடகுறும்பூர், எல்லைகிராமம், கூவாடு,தேன்குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு" .

3 சேந்தநாடு துணை மின் நிலையத்திற்கு செல்லக்கூடிய உயர் மின்னழுத்த பாதையில் இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு காலை 09.30 மணி முதல் 11 30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்விநியோகம் இருக்காது 

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கூட்டடிகள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியாம்பாயைம் தொப்பையாங்குளம், மணலூர், உடையானந்தல், வைப்பாளையம், களத்தூர் திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிபாளையம், மைலங்குப்பம், சேந்தமங்கலம் மற்றும் சேந்தநாடு.

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

தீபாவளி பண்டு மோசடி




தீபாவளி  பண்டு மோசடி 100க்கும் மேற்பட்டோர் கோட்டை காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு.

ஈகிள் சதீஷ் பண்டு என்ற நிறுவனம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆண்டாள் வீதியில் செயல்பட்டு வருகிறது..

இந்த நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்டோர் ரூ.50 முதல் 500 ரூபாய் வரை தீபாவளி பண்டு கட்டியுள்ளனர்.

தற்பொழுது அந்த பணத்தை அந்த நிறுவனம் தர மறுத்துள்ளதால் நூற்றிற்கும் மேற்பட்டோர் கோட்டை காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மு.க.ஸ்டாலின்

கஜேந்திர சிங் ஷெகாவத்

சந்திப்பு



சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

குட்டி காவலர்

மு.க.ஸ்டாலின்

தொடங்கி வைத்தார்



தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

 மு.க ஸ்டாலின்

கே.எம்.காதர் மொய்தீன்

சந்திப்பு



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ன் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்ததனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்.Ex.MLA.,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் இராமநாதபுரம்  நாடாளுமன்ற உறுப்பினரும் கே.நவாஸ் கனி.M.P.,உள்ளிட்டோர் சந்தித்தனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி