Home
கோரிக்கை
ஸ்ரீரங்கம் அருகே வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றில் இடிந்து விழுந்த தடுப்பு சுவர்
ஸ்ரீரங்கம் அருகே வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றில் இடிந்து விழுந்த தடுப்பு சுவர்
ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பு கிழக்கு பகுதி காவிரி அற்றில் 2010 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட "தடுப்பு சுவர் அறை" 1 அடி அகல 50' அடி நீளம் இன்று [ ஜுலை-20 ] அதிகாலை இடிந்து விழுந்தது. அங்கு ஏனைய தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் தகுந்த நடிவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
ஸ்ரீரங்கம் அகிலாண்டேஸ்வரி நகர் பின்புறம் உள்ள காவிரி கரை ஒட்டிய சுமார் 50அடி நீளமுள்ள தடுப்பு சுவர் கரைந்து விழுந்து , மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் , மாநகராட்சி உதவி ஆணையர், காவல்துறை உதவி ஆணையர், பொதுப்பணித்துறை பொறியாளர் பார்வையிட்டனர்.
வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர், மேலூர் கிராம நிர்வாக அலுவலர் உடனிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Back To Top
Post A Comment:
0 comments so far,add yours