திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகளை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்
திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த கோசாலையில் , இந்து சமய அறநிலையத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பசு மற்றும் காளை மாடுகளை மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு 70 பயனாளிகளுக்கு 122 மாடுகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகர மேயர் அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours