புதிய கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் |
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் கரையோர மக்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது
மேலும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது
புதிய கொள்ளிடம் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours