தங்களின் உடல் நலம் விரைவில் சீரடையும், சிறப்புப் பயணம் தோய்வு எதுவுமின்றித் தொடரவும் வாழ்த்துகிறோம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பேராசிரியர் கே.எம்‌ காதர் மொகிதீன் கடிதம். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்(12.07.2022)செவ்வாய்க்கிழமை இரவு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது :

 பேரன்புக்கும் பெரு மதிப்புக்குமுரியீர் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள். தாங்கள் எல்லா நலமும் எல்லாச் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்.

நோயற்ற பெருஞ் செல்வம் தங்களுக்கு எவ்விதக் குறையும் இன்றி நிறைவாகப் பெருகிட இறையருளை வேண்டுகிறேன். ஒயாத உழைப்பு! நாட்டு மக்களைப் பற்றியே உன்னிப்பு ! ஊரும் உலகமும் ஏற்றுப் போற்றும் படியான ஆக்கம் ! நல்லது நாளெல்லாம் நடக்கும் போது பொறாமைக்காரர்களின் புகைச்சலும் ஏற்படும் ! அது யாவும் உதயசூரியன் முன் உதிரும் பணித்துளியாகி விடும் ! எண்ணியாங்கு பயணத்தைத் தொடர எவ்வித இடைஞ்சலும் குறுக்கிடாது தங்களின் நல்வாழ்வில் ! இடையில் வரும் சிறு இடைஞ்சலும் இல்லாது போகும் ! நல்லது செய்யும் நல்லுள்ளம் நாளெல்லாம் தனது நல வாழ்வைத் தொடரும் ! தங்களின் பேரும் புகழும் எங்கும் படரும்  ! உடலைப் பேணுவது உயிரைப் பேசுவதே தான் ! ' உடலை வளர்த்தேன், உயிர் வளர்ந்தேன் ' என்றார் திரு மூலர் தங்களின் அன்பு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் ! ஒய்வு மிக மிக முக்கியம் ! ஒய்வு எடுப்பாரே உயர் உயரச் சென்று உலக மாந்தரின் உள்ளங்களில் நீங்காமல் நின்றுள்ளனர் ! தங்களின் உடல் நலம் விரைவில் சீரடையும், சிறப்புப் பயணம் தோய்வு எதுவுமின்றித் தொடரவும் வாழ்த்துகிறோம். வாழ்க !    வளர்க ! வெல்க !‌  இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours