மதுரை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்
"தமிழக அரசே,மின் கட்டண உயர்வு முடிவினை கைவிடு,மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்து" என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் மாநிலம் தழுவிய சிமினி விளக்கேற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மதுரை தினமணி தியேட்டர்& முனிச்சாலை சந்திப்பு அருகே இன்று 29-07-2022 வெள்ளிக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார்.மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும்,இதில் அப்துல் ஹமீது (மாநில துணைத் தலைவர்,எஸ்டிபிஐ கட்சி),காஜாமைதீன் - மாநில பேச்சாளர்,(பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) சிராஜு நிஷா (மாவட்ட செயற்குழு உறுப்பினர், நேஷனல் உமன் ஃபிரண்ட்) ஆகியோர் கண்டன உரையாற்றினார்.இறுதியாக தெற்கு தொகுதி செயலாளர் எம் பி பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினர்.
இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினர்.
Post A Comment:
0 comments so far,add yours