கட்டளை மேட்டு வாய்க்கால் கரை உடைப்பு - ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு



திருச்சி திருவெறும்பூர் கும்பக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் விவசாய நிலங்களுக்கு பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இந்நிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால்  கரையில் உடைப்பு ஏற்பட்டது. 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த வாய்க்காலில் வரும் நீரால்  பாசனம் பெறுகிறது.

கரை உடைந்த பகுதியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.கரை உடைப்பு குறித்து நீர்வளத்துறை  அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர்  ஆட்சியர் தெரிவித்த போது மதியத்திற்குள் இந்த கரை உடைப்பு சரி செய்யப்படும்.

விவசாயிகள்கவலை கொள்ள வேண்டாம். 22,000 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பயன் பெறுவதால் கரை உடைப்பு சரி செய்வதற்கான பணி நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர்.

தற்பொழுது கரை உடைந்து தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டம் பிடாரி ஏரிக்கு சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours