தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல மாதங்கள் கழித்து ஜூலை 5-ல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறபிக்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்
கொரோனா
தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலோ அல்லது 40 சதவீதத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு என்பது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் நேற்று வரை 2662 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்தாலும் கூட மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.
எனவே தற்போதைய நிலையில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை , ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்களும் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
செய்தியாளர்களைச்
சந்தித்த அவர், “18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்கள் பூஸ்டர் தடுப்பூசியை 386 ரூபாய் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும்.
குறு,
சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு அந்தந்த தொழில் நிறுவனங்களே பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து இதுவரை 10 லட்சம் தொழிலாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours