புதிய நூலகத் திறப்பு விழா
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்
திறந்து வைத்தார்.
திருநெடுங்குளம் ஊராட்சி பகுதியில் ரோட்டரி கிளப் மற்றும் பிரம்மா திருச்சி ஸ்டார்ஸ் இணைந்து அமைக்கப்பட்ட நூலகத்தை 28/7/2022 இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்.திறந்து வைத்து விட்டு பேசிய மாவட்ட ஆட்சியர் நூலகத்தை அமைத்த ரோட்டரி கிளப் உறுப்பினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுபோல் அனைத்து ஊராட்சிகளிலும் தாங்கள் செயல்படுத்திட கோரிக்கை தெரிவித்தார்.
மேலும் மாணவர்களை இந்த நூலகத்தை பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.இந் நூலகத்தில் அனைத்து அரசு தேர்விற்கான அனைத்து புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன்,கே எஸ் எம்.கருணாநிதி,ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி துணை அலுவலர்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours