பெருநகர சென்னை மாநகராட்சி,பெருங்குடி மண்டலம் - பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கே.என்.நேரு ஆய்வு
தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி ,பெருநகர சென்னை மாநகராட்சி,பெருங்குடி மண்டலம்,வார்டு-188க்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் செல்லும் மழைநீர் கால்வாய்களில்,ஆம்பிபியன் இயந்திரம் கொண்டு ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (01.08.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகர மேயர்..பிரியா ராஜன்,சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ்,அரசு முதன்மை செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ,இ.ஆ.ப,மணடலக்குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர் .
Post A Comment:
0 comments so far,add yours