அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் கே என் நேரு வழங்கினார்
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இதில் கலந்து கொண்டு 11 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 4,014 பேருக்கு இலவச மிதிவண்டிகளையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 111 பேருக்கு வீடுகள் மற்றும் மனைகளையும் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 5,364 பேருக்கு ரூ.16.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாநகர மேயர் மு.அன்பழகன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோருடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours