இந்து முன்னணியினரை கண்டித்து
எஸ்டிபிஐ சாலை மறியல் போராட்டம்
இந்து முன்னணியினரை கண்டித்து திருச்சி எஸ்டிபிஐ கட்சியினர் பெட்டவாய்த்தலையில் சாலை மறியல் போராட்டம்.
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம்.
ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி மேற்கு கிராம அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெட்டவாய்த்தலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கொடிகம்பத்தை ஹிந்து முன்னணியின் தூண்டுதலின் பெயரில் முன்னறிவிப்பின்றி எடுத்துச் சென்ற அதிகாரிகளை கண்டித்து
பெட்டவாய்த்தலை பகுதியில் (18.8.2022) மாலை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் திருச்சி முபாரக் அலி தலைமையில் பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி,மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத் மற்றும் மதர்.Y.ஜமால்முகமது ஆகியோர்களும்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தளபதி அப்பாஸ், மர்சூக், சமூக ஊடக அணி மண்டல தலைவர் KSA.ரியாஸ், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும்,ஸ்ரீரங்கம் தொகுதி துணைசெயலாளர் சாகுல் ஹமீது,தொகுதி பொருளாளர் சேக் தாவூத்,பெட்டவாய்த்தலை கிளைத்தலைவர் யாசர் ஆகியோர் ஸ்ரீரங்கம் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தொகுதி,அணி,கிளை நிர்வாகிகளும், செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.அனைவரும் கைது செய்யப்பட்டு மஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours