போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக முன்புற சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் இன்று (13.8.22) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும் , முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த மனிதச் சங்கிலியில், மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் .மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன்,காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி, துணை மேயர் ஜி.திவ்யா, கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலெட்சுமி கண்ணன்,மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி,பல்வேறு கல்லூரிகளின் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours