பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு ‌ தயார் - திருச்சி மாநகர காவல்துறை


திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும், காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்யவும், பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் ஒரு காவல் ஆய்வாளர், 4 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 80 காவலர்கள் கொண்ட"திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழுவினர்களை” தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும்,நீச்சல் தெரிந்த காவல் ஆளிநர்களுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமித்தும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகவும் கவனமுடன் மீட்பு பணியில் ஈடுபடுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும் இவர்களுடன் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் அவர்கள், காவல் உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் சரகம், காவல் உதவி ஆணையர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு, காவல் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
 

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours