சாரண,சாரணியர்
இயக்க தலைவராக
அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு
சாரணர் இயக்கம், உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகும்.உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.இந்த இயக்கத்தை 1907-ல் பேடன் பவல் என்பவர் இங்கிலாந்தில் உருவாக்கினார்.
இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். 'பாய் ஸ்கவுட்ஸ்' என்று அழைக்கப்பட்ட இதுவே முதல் சாரணர் படையாகும்.
நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது. ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் ராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை செயல் படுத்தினார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இயக்கம் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1909-ல் இந்தியாவிலும், சிலி நாட்டிலும், 1910-ல் அமெரிக்காவிலும் சாரணர் குழு உருவானது. 10 ஆண்டுகளுக்குள்ளாகவே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்த இயக்கம் விரிவடைந்துவிட்டது.
நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை சிறுவர்களிடத்தில் வளர்த்து அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்துவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில்,தமிழ்நாடுசாரண, சாரணியர் இயக்க தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த முறை BJP மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், இம்முறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதும் கவனம் செலுத்த தொடங்கியது.கடந்த 2021, மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட தி.மு.க., பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதான தனது பார்வையை செலுத்த தொடங்கியது.
ஆட்சிக்கு வந்த முதல் சுதந்திர தின விழாவிலே இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கடந்த பல ஆண்டுகளாக இவ்விருது வழங்கும் விழா நடத்தப்படாமலே இருந்தது.இதில் அவ்வியக்கத்தை சார்ந்தவர்கள் மனகுமுறலில் இருந்தார்கள்.
எப்போதும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழேதான் செயல்படும். அதன் தலைவராக மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆனால் கடந்த ஆட்சியில் இப்பொறுப்பை அ.தி.மு.க விட்டுக்கொடுத்தது. எச்.ராஜா கேட்டுக்கொண்டார், அதனால் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் விட்டுக்கொடுத்தார் என்பார்கள்.
ஆனால் அதற்கு பிறகு நடந்த சாரண சாரணியர் இயக்கத்திற்கான தலைவர் போட்டியில் எச்.ராஜா படுதோல்வி அடைந்தார்.இதன்பிறகு தி.மு.க ஆட்சிக்க வந்தபிறகு சுதந்திர தினம், குடியரசு தினங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரத சாரண சாரணியர் தலைமையகத்தில் கொடியேற்றி அவ்வியக்கத்தின் செயல்பாடுகளில் இறங்கியது பள்ளிக் கல்வித்துறை.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்கத்தின் தலைமையகத்தில் கொடியேற்றி விழாக்களிலும் கலந்துகொண்டார்.
இதையடுத்து பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பை மீண்டும் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வழங்கும் நடவடிக்கை நடந்தது.இதை தொடர்ந்து அதற்கான தேர்தல் நடத்த ஆயத்தமானது இயக்கத்தின் தலைமை.தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பு கிடைத்துள்ளது.
முதலில் என்மீது நம்பிக்கை வைத்து யாரும் என்னை எதிர்த்து போட்டியிடவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பாலான பள்ளிகளில் சாரண சாரணியர் இயக்கம் தொடங்கப்படும்’ எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours