ஏர்வாடி முஹம்மது சலாஹித்தீன் எழுதிய தக்கலை பீர் முஹம்மது அப்பா ஞானப்பாடல் நூல் வெளியீடு!
சென்னை திருவல்லிக்கேணி பி.எம். கன்வென்ஷன் ஹாலில் 5-8-22 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
ஆன்மிக இசைவாணர் அல்ஹாஃபிழ் பி.எஸ். அஹ்மத் ஸாலிஹ் ஃ பஹீமீ தமிழ்,அரபி, உருது மொழிகளில் இசை பாடினார்.
தக்கலை பீர் முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் ஞானப்பாடல்களுக்கு, நெல்லை ஏர்வாடி மு. முஹம்மத் ஸாலாஹுத்தீன் எழுதிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது.
ஜமாத்துல் உலமா சபையின் சென்னை மாவட்டத் தலைவர் மௌலவி கே.எம். அபூதாஹிர் சிராஜி, சூஃபி தலைமை தாங்கினார்.
வக்ஃப் வாரியத்தலைவர் அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், டாக்டர் நாகூர் ரூமி,மௌலவி ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி,முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப், ஓரெழுத்துக் கவிஞர் ப. ஜெயகுமார்,ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
ஹாஜி எஸ்.எம்.கே. ஹபீப் முஹம்மது, ஹாஜி ஹஸன் பஸரி காதிரி, ஜனாப் நிஸார், திருவான்மியூர் காஜா, ஜஹாங்கீர்,தாழை முஹம்மத் உள்ளிட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.
மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி,நிலா வட்டம் கவிஞர் ஜலாலுத்தீன்,பட்ரோடு ஷவ்கத் அலி,காயல் ஹாஃபிழ் W.Z.ஸாலிஹ் ஆகியோர் நிகழ்ச்சியை நெறிபடுத்தினர்.
நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ,தலைமை நிலைய பாடகர் ஏ.சேக் மதார்,மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது,மண்ணடி மஃரூப்,அலி முஹம்மது மற்றும் உலமாக்கள்,சமுதாயப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவை ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours