மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம்
விஜய் வசந்த் எம்.பி,, கவன ஈர்ப்பு தீர்மானம்
கன்னியாகுமரி மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணிப்பதால் இன்று பாராளுமன்றத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கவன ஈர்ப்பு தீர்மானம் சமர்ப்பித்தார்.
பல மாதங்களாக முடங்கிக் கிடக்கும் நான்கு வழிச் சாலைப் பணிகளைச் சுட்டிக் காட்டி அதை விரைவில் முடிக்க மத்திய அரசு உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் தற்போதைய தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் தொடங்காமல் இருப்பதை எடுத்துக் கூறி உடனடியாக அப்பணிகளைத் துவங்க ஆவன செய்ய வேண்டும் என கோரினார்.
குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் கடலரிப்பால் பாதிப்படைவதை எடுத்துரைத்து கடல் தடுப்புச் சுவர் எழுப்பி நிரந்தர தீர்வு காணக் கேட்டுக் கொண்டார்.மேலும் கடலில் தவறிய மீனவர்களை மீட்கக் கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார்.அத்துடன் நீண்ட காலமாக ரயில்வே துறை சம்பந்தப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதைக் குறிப்பிட்டு அவற்றை விரைவில் நிறைவேற்றுமாறு கோரினார்.
மேற்பட்ட கோரிக்கைகளுடன் விஜய் வசந்த் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களைக் கடந்த சில நாட்களாக நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours