மக்கள் அதிகாரம் சார்பில் சென்னையில் மாநாடு!..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளரிடம் அழைப்பிதழை நேரில் வழங்கினர்!..
மக்கள் அதிகாரம் சார்பில் பாசிசம் முறியடிப்போம் என்னும் தலைப்பில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர்.வெற்றிவேல் செழியன் மற்றும் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் மருது ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களிடம் நேரில் வழங்கினார்.
தொடர்ந்து நாட்டில் நடைபெற்று வரும் பாசிச தன்மைகள் குறித்தும் ,நிகழ்கால அரசியல் குறித்தும் கவலையோடு விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பேரா.மைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours