செய்தியாளரை தாக்கி செல்போன் உடைப்பு நளா உணவு விடுதி ஊழியர்கள் அட்டூழியம்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்
திருவண்ணாமலையில் நளா உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கிய உணவு விடுதி நிர்வாகத்தை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வண்மையாக கண்டிக்கிறது..
திருவண்ணாமலை அண்ணாசாலையில் தங்கும் விடுதியுடன் கூடிய நளா ஓட்டலில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க தீயணைப்பு துறை அலுவலர்கள் அணைத்துக் கொண்டு இருக்கும் போது தகவல் அறிந்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்று செய்தி சேகரித்தும், ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் ஓட்டல் ஊழியர்கள் செய்தியாளர்களை படம் எடுக்க விடாமல் தடுத்தும் தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது புகைப்படம் எடுத்த உரிமைக்குரல் மாவட்ட செய்தியாளர் அ.தேவராஜன் என்ற தேவாவை 20 க்கும் மேற்பட்ட ஓட்டல் ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கி செய்தியாளர் தேவாவின் செல்போனை உடைத்துள்ளனர்.
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் முன்னிலையில் தாக்கி உள்ளனர்.
தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதால் இந்த தீ விபத்து இயற்கையில் ஏற்படாமல், அரசாங்காத்தை ஏமாற்ற எற்படுத்தப்பட்ட நாடகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை வந்த பிறகு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கிய நளா உணவு விடுதி உரிமையாளர் மற்றும் தாக்குதலில் ஈடுப்பட்ட ஊழியர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று மாவட்ட நிர்வாகத்தையும், காவல் துறையையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தியாளரை தாக்கிய ஓட்டல் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (TUJ) சார்பில் மாவட்டத்தில் தொடர் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (TUJ) மாநில துனைத்தலைவரும் திருவண்ணாமலை மாவட்ட தலைவருமான என்.இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours