மதுரை அவனியாபுரத்தில் டூ வீலரை திருடிய இருவர் கைது
அவனியாபுரம் போலீசார் விசாரணை
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதி சேர்ந்த வாசு என்பவரின் மகன் பாலாஜி இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டின் முன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவில் தூங்க சென்றnர்.பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதில் மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவர் மகன் சதீஷ்குமார்(20) என்பவரும்,அவனியாபுரம் அருணகிரி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குரு பிரசாத் (20 )என்பவரும் இணைந்து இரு சக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது இவர்கள் இருவரையும் அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours