ராஜ்நாத் சிங்

எகிப்து அமைச்சர் ஜெனரல் முகமது ஜாகி இருதரப்பு பேச்சுவார்த்தை

எகிப்தின் கெய்ரோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் முகமது ஜாகி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பான வரவேற்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது, கலவரங்களை  தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி போன்றவைகள்  விவாதிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இரு நாட்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்காக இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்களிப்பு குறித்து  இருவரும் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டனர். கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை


Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours