வன உயிரின வார விழா
ஆன்லைன் போட்டி
திருச்சி வனக்கோட்டம் சார்பில் வன உயிரின வார விழா அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை,பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் ஆன்லைனில் நடக்கிறது முதல் கட்டமாக கட்டுரை போட்டி இனறு தொடங்குகிறது.
ஒன்பதாம் வகுப்பு முதல் +2 மாணவ மாணவிகள் வண்ணத்துப்பூச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் "உயிரியல் பூங்கா மற்றும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு என்ற தலைப்பிலும் கட்டுரைகள் எழுதலாம்.
கட்டுரை எழுதும் தாளில் வலது ஓரத்தில் மாணவர் பெயர், செல்போன், பள்ளி பெயர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதற்கான அடையாள அட்டை ஆகியவற்றுடன் இன்று முதல் 24 ஆம் தேதி மாலை 5. 40 வரை தங்களது பதிவுகளை foresttrichy@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், 9789967171என்ற whatsapp எண்ணிலும் பதிவு செய்யலாம்.
பேச்சுப் போட்டிக்கு எல்கேஜி முதல் வகுப்பு, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு ,ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் மூன்று பிரிவுகளாக "வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம் என்ற தலைப்பில்.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12 வரை, கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் எனும் மூன்று பிரிவுகளில் மனித/வன உயிர் மோதல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து நிமிடங்களுக்குள் பேசி குறைந்தபட்சம் 20 எம்பி அளவுள்ள வீடியோவாக 24 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதே வரிசையில் மூன்று முதல் மூன்று பிரிவுகள் வன உயிரின பாதுகாப்பு என்ற தலைப்பிலும் இரண்டாவது மூன்றாவது பிரிவினர் காலநிலை மாற்றம் மற்றும் வன உயிரினம் என்ற தலைப்பிலும் ஓவியங்களில் வரைந்து ஜேபிஇஜி ஃபைலாக மாணவர் பெயர், வகுப்பு, பள்ளி, செல்போன்௭ண், மாணவர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் இமெயில்,வாட்ஸப்பில் 24ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
இத்தகவலை மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.
நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours