அருவியில் தவறி விழுந்து
பள்ளி மாணவன் பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (15). இவர் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சக நண்பர்களுடன் அம்மம்பாளையத்தில் உள்ள வரையறு அருவியில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.
மேலும் ஆற்றின் பாதையிலே சென்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சியில் மேலிருந்து குளிக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது மாணவன் கோகுல் பாறையில் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறை நாளில் குளிக்கச் சென்ற சக நண்பன் நீர்வீழ்ச்சியில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours