ரயில்களை கண்காணிப்பதற்காக இந்திய ரயில்வே புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நேர தகவல் அமைப்பு, ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு மற்றும் வழித்தடம் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை தானாக பெறுவதற்காக ரயில் இஞ்சின்களில் பொருத்தப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அலுவலக விண்ணப்பத்தின், கட்டுப்பாட்டு விளக்கப்படத்தில் ரயில்களின் இயக்கம் தானாகவே பெறப்படும். நிகழ்நேர தகவல் அமைப்பானது, 30 விநாடிகள் காலஇடைவெளியில், புதிய தகவல்களை வழங்குகிறது. நிகழ்நேர தகவல் அமைப்பு பொருத்தப்பட்ட இஞ்சின்கள், ரயில்களின் இருப்பிடம், இயக்கப்படும் வேகம் உள்ளிட்டவற்றை எவ்வித தலையீடுமின்றி கண்காணிக்க முடியும். 21 மின்சார ரயில்களின் 2,700 இஞ்சின்களில் இந்த நிகழ்நேர தகவல் அமைப்பு பொருத்தப்பட்டு வருகிறது.
Post A Comment:
0 comments so far,add yours