திருச்சி கேர் கலை அறிவியல் கல்லூரியில் ஆவணப்பட திரையிடல் - கலந்துரையாடல் நிகழ்வு
திருச்சி கேர் கலை அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பாக ஆவணப்பட திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கேர் கலை அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை ‘கேர் டாக்கீஸ்’ பிலிம் கிளப் தொடக்க விழா மற்றும் ஆவணப்பட திரையிடல் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில், சர்வதேச விருதுகளை வென்ற ‘களிறு’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
கோயம்புத்தூரில் நடைபெறும் யானை மனித மோதல்கள் குறித்து எடுக்கப்பட்ட ‘களிறு’ ஆவணப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் கிருஷ்ணன் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்வை கேர் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ப்ரதீவ் சந்த் தலைமையேற்க, கல்லூரி முதல்வர் து.சுகுமார் முன்னிலை வகித்தார். மாணவர்களிடையே திரைப்படக் கல்வியை திரைத்துறை வல்லுநர்கள் மூலம் கொண்டு சேர்க்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள ‘கேர் டாக்கீஸ்’ பிலிம் கிளப் சின்னத்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன் அழைப்பாளர்கள் அறிமுகம் செய்தனர்.
ஆவணப்பட திரையிடலுக்குப் பின், பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், ஆவணப் படத்திற்கான கரு, வடிவமைப்பு, தயாரிப்பு முறை, தேவை என பல கோணங்களில் கேள்விகளை எழுப்பினர். மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் இயக்குநர் சந்தோஷ் பதிலளித்தார்.
மேலும், ஆவணப்பட இயக்கத்திலுள்ள நுட்பங்களையும், அதனை செம்மை யாக்குவதிலுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை தனது அனுபவத்தின் மூலம் விளக்கினார். இந்த நிகழ்வில் விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் கோகுலன், உதவிப் பேராசிரியர்கள் சாகுல் ஹமீது, பத்மாவதி மற்றும் பல்துறை பேராசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours