ஜப்பான் பிரதமருடன்
பிரதமர் மோடிசந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபேயின் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.இந்தியா-ஜப்பான் இடையே நல்லுறவை பேணுவதிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிடையே திறந்த மற்றும் சுதந்திரமான உறவை வளர்ப்பதிலும் மறைந்த பிரதமர் அபேயின் பங்களிப்புகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை பரிமாறி கொண்டனர். மேலும், உலகளாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். பல்வேறு துறைகளிலும் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்த தங்கள் உறுதிப்பாட்டை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours