SDPI கட்சி பொறியாளர் அணி
மாநில செயற்குழு கூட்டம்
திருச்சியில் மாநிலத் தலைவர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.
பொறியாளர் அணியின் மாநில பொறுப்பாளரும் SDPI கட்சியின் மாநில செயலாளருமான A.அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார்.
பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் முகமது பிலால் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொறியாளர் அணியின்இணையதளத்தை (WWW.SDEW.in) துவக்கி வைத்து பட்டய பொறியாளரான தனது பெயரையும் பொறியாளர் அணியில் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் பொறியாளர் அணியின் சார்பாக கலந்துரையாடல் நிகழ்வில் அணியின் மாநில துணை செயலாளர் முகமது அல்தாப்,மாநில பொருளாளர் சேக் முகமது இலியாஸ்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் இளையான்குடி ஷேக் மஸ்தான் மற்றும் திருச்சி N.G.சதாம் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இதில் பல்வேறு மாவட்ட பொறியாளர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக பொறியாளர் அணி HQ மாநில துணைத்தலைவர் ரஃபி நன்றியுரை ஆற்றினார்).
Post A Comment:
0 comments so far,add yours