திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரி
மாணவ மாணவிகள்
விழிப்புணர்வு பேரணி
திருச்சி எஸ்.ஆர்.எம் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வரை மூட்டுவலிக்கான அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இப்பேரணியில் பங்கேற்றனர்.
முன்பெல்லாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது 45 மேற்பட்டவர்களுக்கு வரத் துவங்கியுள்ளது. இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதில் பெண்களுக்கு அதிகமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக மருத்துவர் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் குறிப்பிட்டார். இப்பிரச்சனை வருவதற்கு உடல் பருமன் மற்றும் சிறிய உடற்பயிற்சி கூட செய்யாமல் இருப்பது காரணமாகவும் தெரிவித்தார்.
முன்னதாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் SRM திருச்சி வளாக இயக்குனர் D.N.மால்முருகன் மற்றும் இணை இயக்குனர் Dr.N.பாலசுப்பிரமணியன் உடனிருந்து வாழ்த்துறை வழங்கினார்கள். பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் Dr.ஆ.மணிகுமார் நன்றியுரை வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours