புனித வளனார் கல்லூரி

மாணவர்கள்

குடை பிடித்து விழிப்புணர்வு




அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கவும் தற்கொலைக்கு முயல்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தவும், உலக சுகாதார நிறுவனமும் தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பும்  இணைந்து கூட்டாகப் பணியாற்றுகின்றன. 

குறிப்பாக மன அழுத்தம் மட்டுமே 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. அதுபோல மது பழக்கத்தினாலும் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி புனித வளனார் கல்லூரி கவுன்சிலிங் துறை சார்பில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. 

தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் குடை பிடித்து விழிப்புணர்வு பாதைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours