தேசிய விளையாட்டு
விருதுகள் 2022
கடைசி தேதி நீடிப்பு
தேசிய விளையாட்டு விருதுகள் 2022-க்கான கடைசி தேதியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அக்டோபர் 1 வரை நீடித்துள்ளது.
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.
இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 27 என்பதிலிருந்து 2022 அக்டோபர் 1–க்கு (சனிக்கிழமை) நீடிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விளையாட்டு வீர்ர்கள் / பயிற்சியாளர்கள் / அமைப்புகள் / பல்கலைக்கழகங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.
அக்டோபர் 1-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் படமாட்டாது.
நமது செய்தியாளர் G.மோனிஷா – சென்னை
Post A Comment:
0 comments so far,add yours