பார்வையாளர்கள் தினம் கொண்டாட்டம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர்கள் தினம் கொண்டாட்டம் ஆய்வகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் புதுடில்லியில் இயங்கி வரும் சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமத்திற்கு கடந்த 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த தினத்தை நினைவு கூரும் வகையில், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் சார்பில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி பார்வையாளர்கள் தினமாக கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து பொதுமக்களும் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை இலவசமாக நேரடியாக கண்டுகளிக்கலாம்.
மேலும் அன்றைய தினம், நவீன தொழில்நுட்பத்தால் தயாரான காரீய அமில பேட்டரி மற்றும் லித்தியம்அயன் பேட்டரியில் இயங்கும் ரிக்ஷா, ஸ்கூட்டர், சைக்கிள் ஆகியவற்றின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மேலும், தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் உற்பத்தி, மின்மூலாம்பூசுதல் ஆகிய பல்வேறு துறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் மாதிரிகள் செயல்விளக்க முறைகள் பார்வையாளர்களுக்கு விளக்கப்படவுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக காரைக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் கண்டுகளித்து மற்றவர்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 04565-241470, 241474, 241204 மற்றும் அலைபேசி 9994614582, 9443609776, 7598449117 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours