பொது பாதையை மீட்க கோரி
வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
மதுரை,திருப்பரங்குன்றம் ஏற்குடி அச்சம்பத்தில் புது சாலையை ஆக்கிரமிப்பதை கண்டித்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் மாப்பிள்ளை விநாயகர் நகர்உள்ளது.இங்குள்ள 40 அடி பொதுப் பாதையை தனியார் ஒருவர் 20 அடி அளவில ஆக்கிரமித்து வீடுகட்டுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஏற்குடி அச்சம்பத்தில் பொதுமக்கள் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இன்று மேற்கு வட்டாட்சியரிடம் நில அளவை செய்ய கோரிக்கை வைத்தது பொதுமக்கள் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் .
ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகரில் உள்ள பொது பாதையை 40 அடி பாதையாக மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நலசங்க துணை செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours