ஊர்க்காவல் படையில் வேலை


திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்சமயம் 35 ஆண் ஊர் காவல் படையினரும், 2 பெண் ஊர் காவல் படையினரும் என மொத்தம் 37 காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. எனவே தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது.

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, வயது 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் ஆண் 125 சென்டிமீட்டர், பெண் 155 சென்டிமீட்டர். மேற்கண்ட தகுதியுடையவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. மேலும் விளையாட்டு வீரர் மற்றும் பேண்ட் வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்பகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

விருப்பம் உடைய விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூபாய் 5 தபால்தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உரையுடன் காவல் சார்பு ஆய்வாளர் ஊர்க்காவல் படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை வளாகம், திருச்சி 620020, என்ற முகவரிக்கு (27.09.2022) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours