பணி நியமன ஆணை
கே.என்.நேரு வழங்கினார்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் பணி, காவலர் பணி, உதவியாளர் பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.அனைவரும் சிறந்த முறையில் பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours