திருச்சி அரசு தலைமை
மருத்துவமனையில்
பிங்க்நிற பலூன்களுடன்
விழிப்புணர்வு பேரணி
தமிழகத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.மேலும் முன்பெல்லாம் 50வயதிற்கு மேற்பட்டோரை தாக்கும் இந்நோயானது தற்போது 30 - 40 வயதுடைய வர்களுக்கும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது. இதனிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி அண்ணல்காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சக்தி ரோட்டரி கிளப் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்பக புற்றுநோய் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் பிங்க் நிற பலூன்களை கையில் ஏந்தியபடி அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் மற்றும் பி வி எம் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியானது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கி நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையை சென்று அடைந்தது.
Post A Comment:
0 comments so far,add yours